பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

உதாரணமாக...(பக்கம் 6) இன்னும் சாது வடித்து அழகு பார்க்க', 'பேர் போடப் போனேம்" போன்ற அழகான பேச்சு வழக்கு பிரயோகங்கள் காணப்படுகின்றன. கொச்சைச்சொல்லே பாத்திரங்களின் பேச்சிலேதான்சொல்ல லாம், ஆசிரியர் எழுதக்கூடாது என்று மேடை மேல் தமிழ் எழுதச் சொல்லித்தரும் போதகர்களே பார்க்கிருேம். இந்த நாவலாசிரியை ஒரு கலாசாலைப் பேராசிரியர்: ஆன லும் குறட்டையின் ஒலி பெலந்தான் பெலமாகக் காறித்துப் புவதிலிருந்து அறியலாம் என்று எழுதி இருக்கிருர், தெரிந்தேதான் அவர் இந்தச் சொல்லே உபயோகித்திருக் கிருர் ஆசிரியை. எனக்கு இது உடன்பாடு.

இங்கிலீஷ் வாக்கிய அமைப்பு என்றும், இங்கிலீஷில் நினைத்து தமிழில் எழுதுகிருர்கள் என்றும் ஒரு கிளிப்பிள்ளை புகார் உண்டு. அவள் பலர் காண வெளியில் வருவது கூடாது. இது அவள் விலையை குறைப்பதாகும் என்று எழுதி இருக்கிருர்...இதுவும் எனக்கு உடன்பாடு. வளரும் தமி ழுக்கு இதெல்லாம் தேவைதானே.

ஆக, புத்தம் வீடு' நாவலை நான் படித்து வந்தபோது இன்றைய பல நாவல்களை நான் உதறிவிடுவதுபோல் என் ல்ை புறக்கணிக்க முடியாதபடி அது என் கவனத்தை நீடிக் கச் செய்து கொண்டிருந்தது. அதன் நிறைகுறைகள் என் மனதில் பட்டதைக் கொண்டு சுமாரான நாவல் என்று சொல்லுகிறேன். அதோடு இந்த ஆசிரியரின் அடுத்த நாவலை எதிர்பார்க்கிறேன். அது நல்ல நாவலாகவோ சிறந்த நாவலாகவோ இருக்கக்கூடும்.