பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

பொய்த் தேவு'வில் சொல்லி இருப்பதுபோல நிதானமாகச் சொல்லிச் சென்றுவிட்டார். இருந்தாலும் இந்தக் கட்டம் தேவையில்லே, இதுக்கு மாருகக் கதையின் மென்மையான போக்குக்கு ஏற்ற இசைவான வேறு சந்தர்ப்பங்களை ஏற் படுத்தி சுதாவாக கதை விருவிருப்புக்கு வழி செய்திருந்தால் கருதி மாறி இருக்காது என்று சொல்லத் தோன்று கிறது.

இன்னெரு குறை உதாரணத்துக்கு:

இந்த மாதிரி எழுதுவது அறுபதுக்களில் பத்தாம் பசலி எழுத்துதான். வேத நாயகம் பிள்ளையும், ராஜம் அய்யரும் மாதவையாவும் அன்று முக்கால் நூற்ருண்டுக்கு மேற்பட்ட பழய கால்த்தில் இந்த மாதிரி எழுதினதுக்கு மன்னிக்கலாம்-தமிழுக்கே முதல், ஆரம்ப நாவல்கள் என் பதுக்காக, அநுதாபமாகப் பார்த்து. வ.வெ.சு. அய்யரின் குளத்தங்கரை அரசமரம் இப்படிப் பேசினபோதுகூட அது கதாபாத்திரமாகத் தன் உணர்ச்சியைக் கலந்தது. அது பொருத்தமானது. ஆளுல் இங்கே சாட்சியாக உள்ள ஆசி ரியை தன் உணர்ச்சியை அப்பட்டமாகக் கலக்கிரு.ர். கதாபாத்திரங்கள் அசட்டு அபிமான இருக்கத்தோடு (செண்டி மென்டலாக) நடந்து கொள்வதுதான் நம் தற் போதிய நாவல், சிறு கதைகளில் காண்பது சகஜமாக. இங்கு ஆசிரியையே சென்டிமென்டலாக தன் வேதனைக்குரல் கொடுக்கிரு.ர். இது கலைத்தரமானது இல்லை. இதே மாதிரி இந்த ஒரு இடத்தில் பனேயேறிகளின் வாழ்க்கை பற்றி துயரக்குரல் கொடுத்திருப்பது ஆசிரியை தன்னை முன் நிறுத்திக் கொண்டு பனேயேறிகள் மகாநாட்டு தலைமைப் பிரசங்கம் போல் தொனிக்கிறது . இதெல்லாம் தவிர்த்தாக வேண்டியவை, சுமாரான நாவல் என்பதிலிருந்து அடுத்த படிக்கு இது நல்ல நாவல் என்ற பிரமோஷன் பெற வேண்டு மாளுல் . . . . . . . .

இந்த நாவலில் அங்கங்கே உபமானங்கள் யதார்த்த மாகவும் நல்ல கவனிப்பைக் காட்டுவதாகவும் இருக்கின்றன.