பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மொத்தமாக, இந்த நாவல் ஒரு முழுமை பெற்றி ருப்பது படுகிறது; ஒருவிதத் திருப்தியும் தருகிறது. ஆனல் ஒரே ஜாதி ஆலுைம் பனேயேறித் தொழில் குடும்ப அந்தஸ்து மாறுபாடு சம்பந்தமான ஒரு பிரச்னையை ஆரம்ப முதல் மென்மையாக, நாகுக்காகக் கையாண்டு மெது வாக லாகவமாக கதை வளர்த்து வந்த படைப்பாளி கடைசி அத்யாயத்துக்கு முந்தின. அத்யாயத்திலே, அதாவது அண் ணன் மகள் மூத்த லிஸிக்கு மணமாகுமுன் தம்பி மகள் சின் னவள் லில்லிக்கு மணம் ஆகவும் வந்த அடுத்த அத்யாயத் திலேயே இதுவரை உளப்போக்கு ரீதியாக கதை ஜோடித்து வந்ததை கைவிட்டு விட்டு, ஒரு கொலை, கைது, விசாரணை, தற்கொலை, விடுதலை ஆகிய நிகழ்ச்சிகளை ராக்கெட் வேகத் தில் மளமளவென அடுக்கி, லிஸி-தங்கராஜ் மணத்தை முடித்துப் பார்க்க ஏன் இந்த அவசரம்? அதோடு அவர்கள் பிரச்னை தீர, தன் பெண்ணுக்கு முன் தம்பி பெண்ணுக்கு மணம் நடந்த ஆத்திரம், பனையேறித் தொழில் செய்யும் தங்கராஜ் தன் பெண்ணை கட்டிக்க கேட்ட கோபம் இரண் டும் சேர தங்கராஜ் அரிவாளாலேயே தன் தம்பியைக் கொன்று, தங்கராஜ்தான் கொலை செய்தவன் என்று பழி சுமத்தி விசாரணை நடக்கச் செய்து, பின் தன் குற்றம் தன்னை அறுக்க அண்ணன் தற்கொலை செய்து கொண்டது இதெல் லாம் அவசியமா இந்த நாவலுக்கு. இங்கே கொலையும் தற் கொலையும் பிரச்னையாக வந்திருந்தால் சரி. ஆனல் இவை ஒரு நொண்டிச்சாக்காக, கதை முடிச்சவிழப்புக்கு சுளுவாக உதவக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகவே வருகின்றன. உண்மை யில் இந்த அத்தியாயத்தைப் புத்தகத்திலிருந்து அப்படியே எடுத்து விட்டால் என்ன என்று தோன்றுகிறது எனக்கு. செய்து விடலாம். அதுக்கு பதில் இடைச் செருகல் செய்ய எனக்கு உரிமை கிடையாதே. - -

போகட்டும் இந்தப் பெரிய குறையிலும் ஒரு ஆறுதல் படிப்பவனுக்கு. கொலே, வழக்கு, தீர்ப்பு, தற்கொலை இத்யாதிகளுக்கெல்லாம் ஆசிரியை காட்சிகள் கட்டங்கள் ஆர்ப்பாட்டமாக எழுப்பாமல், க. நா. சுப்ரமண்யம்