பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. I

ஜம்பத்துக்குக் குறியீடுகளாக நிற்பவர்கள்தான் காணப் படுகிரு.ர்கள். சீராக இருந்த நிலமை அநுபவித்துச் சீர் கெடும் நாட்களையும் பார்த்து வரும் கண்ணப்பச்சிகூட முன் வந்து நிற்கவில்லை. எல்லோருமே லிஸி-தங்கராஜ் பிரச்னைக்கு உதவுகிற அளவுக்குத்தான் வந்து போகி முர்கள்.

லிஸி, தங்கராஜ் இருவருமே இன்னும் உருவாகாத,

சிறு வயது வளர்பருவத்தினர் போலத்தானே இருக்கிருர்கள்.

தங்களைச் சுற்றியுள்ள தங்களவர்கள் ஆட்டுகிறபடி எல்லாம்

தானே நடந்து கொள்கிருர்கள். தங்கள் காரியத்தை சாதிக்கத் தக்க வழி வகை தெரியாமல், தீர்மானிக்க முடி யாமல் தவிக்கிரு.ர்கள். ஏதோ ஏசுநாதர் அருள் இருந்து அவர்களை சேர்த்து வைக்கிற மாதிரிதான் (உபதேசியார் தானே துப்பு துலக்கி தங்கராஜ் விடுதலைக்கு வழி செய்கிருர்) அவர்கள் பிரச்னை தீர்கிறது. இந்த நாவலில் லிஸி-தங்க ராஜ் பிரச்னைதான் முக்கியமே தவிர, லிஸியோ தங்க

ராஜோ, வேறு யாரோ முக்கியம் இல்லை. ஒரு குறிப்

பிட்ட கட்டத்தில் நிறுத்தப்பட்ட இரண்டு அந்தஸ்து

வித்யாசக் குடும்பத்தவர்கள் சில சிறு மனப்பிராந்திகளைக்

கொண்டு, நினைத்து, காரியம் செய்து சிக்கல்களை விளை

வித்துக் கொள்கிருர்கள். அவதிப்படுகிருர்கள். அவர்களில்

விளிக்குத்தான் பிரச்னை கொஞ்சம் கடுமையாக உள்ளது.

உள்ளூரத் திடம் இருந்தாலும் வெளியே நடந்து கொள்கை

யில் அதைத் தக்க சமயத்தில் காட்ட்ச் சக்தியற்றவளாகவே

இருக்கிருள். தங்கராஜோ தான் செய்கிற காரியம் என்ன என்பதை அவன் உணர்ந்தவன்தான். ஆனல் ஆசையை சக்திக்கு மீறிக் கொண்டு விட்டவன். முன்னும் போக முடி யாமல் பின்னும் போக முடியாமல் இக்கட்டான நிலைமை யில் குழம்புகிருன்.அவகைப்பிரச்னைக்குத்தீர்வு காணவில்லை. அவன் சக்திக்கு மீறி அவன் ஆசைப்பட்டதுபோல் அவன்' சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியால்தான், பிறரது சக்தி யால்தான் அவன் பிரச்னை தீர்கிறது. - - - - -