பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 0

ஒடிலுைம் பனைமரம்தான் எங்கள் முன் நிற்கும். நாவலில் வரும் பனேவிளைபோல் பல கிராமங்களை, கிராம வாசிகளின் பேச்சை நிறையக் கேட்டிருக்கிறேன். திருநெல்வேலிப் பேச் சுக்கும் பனேவிளேக் கிராமத்தாரின் பேச்சுக்கும் அதிக வித்தி யாசம் இல்லை. நான் இந்த நாவலை படிக்கிறபோது ஒரு சில சொற்கள், தவிர மற்றப்படி எனக்குப் புரிந்தது. உதா ரணத்துக்கு, அனந்த ரத்தி, அடிச்சக் கூடு, பாட்டாக் காரர், அக்காணி, டீக்களுர், புரோகதி, இற்செறிப்பு, புளா யிடம் போன்றவை. ஆனல் சந்தர்ப்பத்தில் இவைகளைப் பொருள் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு நாவலில் வரும் பிரதேசச்சொற்களை இப்படித்தான் வாங்கிக்கொள்ள வேண் டும். இந்த நாவலில் பிரதேச மணம் எழுகிறது. ஆனல் மென்மையாக வீசுகிறது. அழுத்தம் இன்னும் விழுந்திருக் கவாம். முதல் நாவல் இல்லையா? கோடி காட்டி இருப்பது வளரும் கைக்கு அறிகுறி.

இந்த நாவலின் ஆரம்பப் பாராவே எனக்குத் திருப்தி தருகிறது. அதேபோல் பல இடங்கள் இருக்கின்றன. ஆனல் வர்ணனையும் நடையும் நாவல் நெடுக இதேபோல போயிருந்தால் அதிகக் கனம் நாவலில் ஏறி இருக்கும். போஷாக்கும் சேர்ந்திருக்கும். -

இந்த நாவல் புறம்போக்கான கதை சொல்லல் வழி பின்பற்றியது. மூன்ரும் மனிதப் பார்வை நாவல். ஆசி ரியை கதையைத் தடம் பிசகாமலும் அவசியமான தகவல் களை மட்டும் தேர்ந்தெடுத்தும் சொல்லிச் செல்கிரு.ர். சொல் செட்டு, வளர்த்தாத, நீர்க்காத சம்பாஷணை, இதெல்லாம் இருக்கிறது. கதாபாத்திரங்கள் வர்ணனை எல் லாம் கச்சிதமாகத்தான். பாத்திரங்கள் யாரும் அப்படி ஒன்றும் தீர்க்கமான, திடமான, அழுத்தமான பாத்திரங்கள் இல்லை. குறித்து முதன்மையாக இவர்தான் அடுத்தபடி, இவன் என்றெல்லாம் சுட்டிச் சொல்லத்தக்க குறித்த தனிப்பாத்திரம் யாரும் இல்லை. ஏதோ குடும்பப் பெருமை மட்டும் பேசும்; இன்றுசீர்குலைந்து கிடக்கி ற ஒருகுடும்பத்தின்