பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.59

பாத்திரங்களும் ஒருவர் பின் ஒருவராகச் சேர்ந்து வருகிற போக்கில் ஒரு இடத்து, ஒரு மத, ஒரு ஜாதி, ஒரு பழக்க வழக்கச் சித்திரம் உருவாகத்தான்செய்கிறது. இனம் காண முடிகிற அளவுக்குக் கற்பனையில் உருப்பெருகிறது. பிரதேச நாவல் என்ருல் ஏதோ அந்தப் பிரதேசத்துக் கொச்சையை அள்ளிக் கொட்டி விட்டால் போதும் என்று தப்பாக கணித் துக்கொண்டிருப்பவர்கள் நமது எழுத்தாளர்கள் பலரும். அதோடு ஒரு இடத்தை பூகோள ரீதியாக வர்ணித்து விட் டால் போதும் என்றும் நினைக்கிருர்கள். இது இல்லை; பிர தேச நாவல் என்பது ஒரு இடத்து மண்ணுக்கு உரிய தனி வித சுபாவம், காற்ருக எங்கும் பரவி இருக்கவேண்டும். அது தான் பிரதேசநாவலுக்கு மூச்சு. அமெரிக்க நாவலாசிரியர் வில்லியம் பாக்ஸரின் நாவல்கள் தலை சிறந்த உதாரணம். என் நாவல் வாடி வாசல் மதுரை ராமதைபுரம் மாவட்டங் களில் அவைகளிலும் குறிப்பிட்ட பிரதேசங்களில்தான் நடக்கும்.

நாகம்மாள் நாவலுக்குப் பிறகு புத்தம் வீடு'தான் ஒரு புதிய பிரதேசத்தை இனம் காணச் செய்யும் நாவல் என்று நான் நினைக்கிறேன். கொச்சைக்காக மட்டும் இல்லை , சுபாவத்துக்காக. பனையேறிகளின் வாழ்வு இங்கே படமாகிறது. இந்த ஜாதியாரின், இந்தத் தொழி லில் ஈடுபட்டவர்களைப் பற்றிய முதல் நாவல் இதுதான். கிருஸ்தவக் குடும்பம் இங்கே பேசுகிறது. கிருஸ்தவ சமூக நாவல் நான் தமிழில் படிப்பதும் இதுதான் முதல் தடவை. அன்று நாகம்மாள் கொங்கு நாட்டைக் காட்டியது. பி. எஸ். ராமையா தன் சிறு கதைகளால் மதுரை பிராந்தி யத்தையும், புதுமைப்பித்தன் திருநெல்வேலி பிரதேசத்தை யும் கோணம் காட்டினர்கள். இப்போது திருநெல்வேலிக் கும் தெற்கே கேரளத்தை ஒட்டிய தமிழ்ப் பகுதியில் உள்ள கன்யாகுமாரி பிரதேசம் இதில் கோடித்ாட்டப்படு கிறது.

நான் திருநெல்வேலி ஜில்லாவையும் குமரி தையும் கொஞ்சம் அநுபவித்தவன். தாம்ர பரணி

தேசத் அங்கு