பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

கண்ணப்பச்சியின் வேறு வழியில்லாத சம்மதத்தோடு-இப் படியாகக் கதை முடிகிறது. - .

நாவலின் கதையம்சம் உங்களுக்கு தெரிந்திருக்கும் இதி லிருந்து. இந்தக் கதை ஏதாவது புதுசாகத் தொனிக்கிறதா? நம் சினிமாக்கதை போல இருக்கிறது என்று நான் சொல்லத் துணிவேன். மோகமுள் மாதிரி பால் உணர்வு கலையாசை சம்பந்தமான ஒரு அடிப்படை மைேதத்துவப்போராட்டம், 'பொய்த்தேவு மாதிரி நிஜத்துக்கும் பொய்க்கும் வித்தி யாசம் காண இயலாத ஒரு வாழ்க்கை யாத்திரைஅனுபவம். 'இதய நாதம் மாதிரி குரலால் செய்த உபாசனையை இழந்து இதயத்தால் பகவானை உபாசனை செய்யும் நிலைக்கும் வடு ஏற்பட்டத்திலே நிம்மதி பெறுமுன் நடுவே பட்ட வேதனை. நாகம்மாள்' மாதிரி அப்பாவியாக இருந்து ஊர் அவருக்குக் கொடுத்த தொல்லையில் ஊரையே எதிர்க்கத் துணிந்த ஒருமனதின் போராட்டம் போல ஒரு விசேஷ! கதையம்சம் கொண்ட நாவல் இல்லை இது. அவை மாதிரி இருந்திருந்தால் ஒரு பெருமுயற்சி என்று நினைத்திருப்பேன்.

ஆக, ஒரு சாதாரணக் கதையம்சம் கொண்டது இந்த நாவல். ஆனல் அதுக்காக நான் அதை ஒதுக்க, புறக்கணிக்க முற்படவில்லை. அவரது நோக்கத்தை, உத்தேசத்தை, கதைக்கருவை அவரவருக்கே விட்டுவிட வேண்டியதுதான் விமர்சகன் தர்மம். படைப்பாளி கொடுப்பதை ஏற்க மறுத்து விமர்சகன் எதிர்பார்ப்பதை விரும்புவது சரியான காரியம் இல்லை. எனவே, நாவலுக்கான விஷயத்தை அங்கீ கரித்து, அதன் உள்ளடக்கத்துக்கு கைத்திறன் பயன்பட்டி ருப்பதையும் காணும் கலைத்திறனையும் நிதானிப்பதுமே விமர் சகன் வேலையாகும். *

பழகின கைகள் செய்கிற காரியத்தை புதுக்கைகளில் எதிர்பார்க்க முடியாது. ஆனல் ஹெப்ஸிபா ஜேசுதாஸன் கை சரியாக எழுத ஆரம்பித்திருக்கிறது. பனேவிளே கிராம தம் வீடும் நமக்கு அறிமுகப் படுத்தப்படுவது.முதல்