பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 57

இரண்டும் விளையாடும் விளையாட்டு எப்படி இருக்கும், எதில் முடியும், எந்த விதமாக முடியும் என்பதை ஒரு கோணத்திலிருந்து பார்க்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் தமிழ் நாவலுக்கு அப்படி ஒன்றும் புதுசு இல்லை. சிறு கதைகளிலும் சில நாவல்களிலும் கையாளப்பட்டிருப்பது தான். எனவே புதுசான ஒரு கதையாகப் படவில்லை எனக்கு. ஆனல் அந்தஸ்தும் வறட்டு கவுரவமும் ஒரு சோக நிகழ்ச்சியாக துன்ப முடிவுக்கு இட்டுச் செல்லாமல், ரோமியோ-ஜூலியட் லைலா-மஜ்னுன் வாழ்வு போல் ஆகாமல் லிஸி-தங்கராஜ் உறவு ஒரு இன்பமான முடிவுக்கு உதவி இருக்கிறது.

அப்பட்டமாகச் சொல்லப்போல்ை இது ஒரு காதல் கதைதான். லிஸி-தங்கராஜ் ஆசை நிறைவேற்றம் பற்றிய உத்தேசம்தான் ஆசிரியரின் முதன்மையான, ஏன், ஒரே நோக்கம் என்று சொல்லலாம். எனவே காதல்வழி கரடு முரடாகத்தானே இருக்கும். இருந்தாக வேண்டும் என்ற சம்பிரதாயமும் இருக்கிறதே. எனவே அதுக்குக் குறுக்கே வருகிறவர்கள், ஏ ற் படு ம் நிகழ்ச்சிகள், குரோதம், பொருமை, இதெல்லாம் வந்தாக வேண்டும் இல்லையா? 'புத்தம் வீடு பழம் பெருமை கொண்ட லிஸியின் தாத்தா கண்ணப்பச்சி, அவள் குடிகார தகப்பன், மூர்க்கனை சிற்றப்பா, குரோதம் காட்டும் சிற்றப்பா பெண் லில்லி, கபடமாக நடந்து கொள்ளும் அவள் கணவர் வைத்தியர் போன்றவர்கள் சிக்கல்களை ஏற்படுத்தி, அதிகப்படுத்தி விபரீதத்துக்கு கொண்டு விட்டு விடுகிருர்கள். பெரியவள் லிஸிக்கு மணம் ஆகாமல் சிற்றப்பா பெண் சிறியவள் லில்லி கல்யாணம்,அந்தஸ்து குறைவான தங்கராஜ்லிஸியைமணக்க கேட்டல், இரண்டாலும் தந்தை ஆத்திரம், சிற்றப்பா கொலை, தங்கராஜ்மீது கொலைப்பழி, ஆளுல் கொலை செய் தது குடிகாரத் தகப்பன், தந்தையின் தற்கொலை, உபதேசி யாரின் ஆதரவான செயல், உண்மை வெளிவருதல், தங்க ராஜ்-லிஸி திருமணம், ஒய்ந்த மனம் கொண்ட கிழட்டுக்