பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4台

சிவநேசச் செல்வராக மதுரன் கண்டராதித்தனையும், செம்பியன் மாதேவியாரையும் சிறப்பாகத்திட்டி இருக்கிரு.ர். மதுரக் குரலில், பக்திப்பாடல்களே மதுரன் கண்டராதித்தன் பாடும்போது அருகிலிருந்தவர்கள் நெக்குருகி அனுபவிப்ப தாக வர்ணிக்கும் போது, நாமும் நம் வசமிழந்து அந்தப் பாக்களின் நயத்திலே உருகி விடுகிருேம்.

(அரச பதவிக்கு போட்டி எப்போதும் உண்டு. வேறு நாட்டு ஒற்றர்களின் நடமாட்டம், காபாலி ககாளாமுகர் களின் உருட்டல் மிரட்டல்கள். காளிமாதேவிக்கு நரபலி கொடுக்கும் திட்டங்கள். யாவும் தத்ரூபமாகத் தோன்று கின்றனர். -

சரித்திர நாவல், குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே விரிய வேண்டும். (உயரக் கட்டிய கம்பி மேல் நடப்பதற்கு ஒப் பாகும் எனச் சொல்ல நேர்ந்தது. தொடர்கதையாக வெளி வருவதிலும் ஒரு கஷ்டம் இருக்கிறது. ஒவ்வொரு இதழ் முடி விலும், அடுத்து வரும் தொடரின் வித்து ஊன்றப்பட வேண் டும். சமூக நாவல்களில் அப்படி ஆலுைம் ஒப்புக் கொள்ள லாம். ஆனல், சரித்திர நாவலில் அதற்கு இடமேயில்லை. நாவல்ரூபமாக படிக்கும் போது, அம்முறை சிறந்ததல்ல என்று தெளிவாகும். நந்திபுரத்து நாயகி, தொடர் கதை யாக வெளி வந்த போதும் சுவை குன்ருதிருந்தது. புத்தக வடிவில் வெளி வந்தும் அச்சுவை மாருமலிருப்பது போற்றத் தக்கது.

பிரபல நாவலாசிரியை ஜேன் ஆஸ்டினின் நாவலில், திடுக்கிடும் சம்பவங்களில்லை, மர்மமில்லை, கொலையில்லை. ஐந்து பெண்களேக் கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பக் கதை. தந்தை சற்றே மேதாவிலாசம் பொருந்தியவர். தாய், தன் பெண்கள் திருமணத்திற்காகவே உயிர் வாழ்ந்தாள் என லாம். இவ்வளவுதான். ஆல்ை, இதைப் படித்ததும், புத்தி சாலியான நண்பரொருவருடன் உரையாடுவதைப் போன்ற மன நிறைவு ஏற்படுகிறது. நுண்ணிய மெல்லுணர்ச்சிகளைத் திறம்பட விவரிக்கிருர் ஆசிரியை. . . . . . . . ."