பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

பழவேட்டரையரின் மகளாக அரச மாளிகைக்கு வருகிருள். சிறிய தந்தையின் ஆணைக்கேற்ப இளைய பிராட்டியாரின் அன்பைச் சம்பாதித்துக்கொள்ள வருகிருள். பழவேட் டரையர் இளைஞன் மதுராந்தகன் கண்டராதித்தன் அரச பதவியேற்கக் கூடுமென்று கருதினர். தன் மகளும் மதுரன் கண்டராதித்தனும் உரையாடுவது கண்டு மகிழ்கிரு.ர். அருண்மொழி மன்னராவது நிச்சயம் என்று கண்டுகொண்ட தும், மகளின் மனத்தில் மாற்றம் ஏற்படுத்துகிருர், சொக் கட்டான் காயை நகர்த்துவது போல், மாதேவியும் கண்ட ராதித்தரிடமிருந்து மனதைப் பறித்து, அருண்மொழி வர்மரிடம் செலுத்துகிருள். ஆனல் வானதிதேவியின் வாழ் நாள் முடியும் தருவாயில், பட்டத்தரசியானலும், அடுத்த பட்டத்துரிமை வானதியின் மகனுக்கே எனும்போது, ஸ்திர மில்லாத பேதை நெஞ்சத்தில் இவ்வளவு உயர்ந்த மாற்றமா என்று வியப்புறுகிருேம்.

வந்தியத்தேவன் ஒர் உயர்ந்த படைப்பு. சோழநாட்டு அரசிளங்குமரர்களோடு வளர்ந்தான். அன்னியநாட்டின ரான பரமேஸ்வர், தங்கள் நாட்டு படைத்தளபதியாக பதவியேற்க அவரிடம் கெஞ்சுமளவுக்கு வீரம் படைத்தவர். குந்தவையின் அன்புக்குப் பாத்திரமானவர். அபாண்ட மாகப் பழி சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாலும், தன் நிலை தவருதவர். தப்பித்துப் போகப் பல வகையில் பலர் தூண்டினலும், அநியாயமாகப் பழி சுமத்தப்பட்டேன், தப்பித்துச் சென்ருல் பழியை ஏற்றுக் கொள்வது போலாகும். தண்டனை விதித்தவர்கள், தாமே அதைத் தவறு என்று உணர்ந்து விடுதலை செய்யும் வரை வழி திறந் திருந்தாலும் தப்பித்துப் போக மாட்டேன், என் உறுதி பூண்டவர். விடுதலே பெற்ற பிறகும் கெளரவத்துடன் உணர்ச்சிகளை வெளிக் காட்டாது இருந்து, ஆதித்தரின் கொலைக்கும், தனக்கும் சம்மந்தமில்லை என்று தெளிவான பின்னரே தேவி குந்தவையை மணம் புரிந்துகொள்ள இசைந்தான். . - -