பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

肇割

தாள். அன்பு செலுத்தினள். உண்மை. ஆனல், இருவருக்கும் யாரிடமும் வெறுப்பு கிடையாது. அதுவும் உண்மை.

ராணி எலிஸபெத், இளையபிராட்டி குந்தவை-இரு வரும் நம் அகத்தே நிறைந்து மனதைக் குளிர்விக்கிருர்கள்.

வீரதீரமிக்க இளைஞராக அருண்மொழிவர்மர் நமக்கு அறிமுகப் படுத்தப்படுகிரு.ர். இளவயதில் வானதியை மணந்து, இன்பவல்லியின் கலைக்கு அடிமையாகி, இறுதியில் இளையபஞ்சவன் மாதேவியை மணக்கிரு.ர். சிறு வயது. அபார வடிவழகு. அரச குடும்பத்தவர். அதிகாரம் செலுத்தியே வாழ்நாளெல்லாம் இனிதாகக் கழிக்கக்கூடிய அந்தஸ்து. ஆனல் அவையடக்கம் என்ற பண்பிலே வளர்ந்தவர். இளைய பிராட்டியாரை முன்னேடியாகக் கொண்டவர். நாட்டின் நலனுக்காக, நல்வழி நடப்பவர். இவருடைய குணசித்திரமும் தொய்வில்லாமல் தீட்டப் பட்டிருக்கிறது. ஓரிடம் தவிர. பெரிய பழவேட்டரையர் மகள் மாதேவியை, இளைய பழவேட்டரையரின் வேண்டு கோள், ஏன் வற்புறுத்தலுக்காகவே மணந்து கொள்கிரு.ர். பேதைபோல் அரியணை ஏறமாட்டேன் என்று விளையாட் டாக சபதம் செய்த வானதிக்கு அரியணை ஏறும் வாய்ப் பில்லாமலே போய்விடுகிறது. மாதேவி பட்டத்தரசி யாகும் பேறு பெறுகிருள். ஆனல் கலையரசியான இன்ப வல்லியின் நிலையோ, பரிதாபத்திற்கு உரியது. முல்லைத் தீவில் அவள் இதயம் கவர்ந்து செல்கிருர். இருவருரிடையே அடுத்த சந்திப்பு நிகழ்வதற்குள், பெரிய சில மாறுதல்கள் ஏற்பட்டு விடுகின்றன. இந்தச் சந்திப்பின்போதும், இன்ப வல்லியின்மீது அன்பைப் பொழிகிருர் - அதோடு சரி. பேதைப் பெண். இளவரசரை மீண்டும் பார்க்க மாட்டேன் என்று இளைய பிராட்டியிடம் சத்தியம் செய்துவிட்டு, அஜந்தா சித்திரங்களைப் பார்க்கப் போய்விடுகிருள், அந்தக் கலைச் செல்வி.1

இளைய பஞ்சவன்மாதேவி மனதில் நில்லாது போய் விடுகிருள். துடிப்புள்ள இளம் பருவத்துப் பெண்ணுக,