பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

1966 ஜூலை மாதம் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினரால் நடத்தப்பெற்ற நாவல் விழாவில் பேசப் பெற்ற ஆராய்ச்சி விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இதைத் தொகுத்து வெளியிடும் வாய்ப்பினை எங்களுக்களித்த எழுத் தாளர் சங்கத்தலைவர் திரு. அழ. வள்ளியப்பா அவர்கட்கும், சங்க அங்கத்தினர்களுக்கும் முதற்கண் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிருேம்.

நாவல் விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. 15 தமிழ் நாவல்களைப்பற்றி 15- எழுத்தாளர்கள் பேசினர்கள். ஆல்ை இந்நூலில் 13 கட்டுரைகளும், மூன்று தலைமை உரை களுமே இடம் பெற்றுள்ளன.

பேராசிரியர் டாக்டர் மு. வ, அவர்களின் கரித் துண்டு பற்றி திரு. பி. ஸி. கணேசன் அவர்கள் பேசினர் கள். அவர்களுடைய நல்ல விமரிசனப் பேச்சை வரிவடிவில் ஆக்கித்தர அவர்கள் எடுத்துக் கொண்ட காலம் முடிவின்றி நீண்டுகொண்டே போகிறது. மாநாட்டில் புத்தகத்தை வெளியிட வேண்டுமென்ற நிலையில் அக்கட்டுரை இந் நூலில் இடம் பெறவில்லை. 1966-ஆம் ஆண்டில் வெளி யிடப் பெறும் ஒரு நாவல் விமரிசன நூலில் டாக்டர் மு.வ. அவர்களின் நூல் பற்றிய விமரிசனம் இடம் பெறவில்லை என்பது ஆச்சரியப்படக் கூடிய விஷயம் மட்டுமல்ல; பதிப் பாளர், என்ற முறையில் எங்களுக்கு மிகவும் மனவேதனை யளிக்கும் விஷயமும் ஆகும்.