பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னென்று திரு. ஜெகசிற்பியனவர்களின் திருச் சிற்றம்பலம்' நாவலைப் பற்றி திரு. கோவி மணிசேகரனவர் களின் ஆய்வுரை. திரு. கோவி மணிசேகரனவர்கள் தமக்குச் சரியென்று பட்டதைத் துணிவுடனும், அழுத்தமாகவும் தெரிவித்திருக்கிருர். மேடையில் பேசுகிறபடியே எழுத்தில் வெளியிடுவது சுலபமல்ல; அதிலும் புத்தக வடிவில் வரும் போது இன்னும் அதிகக் கவனமும், இங்கிதமும் அவசியம். ஜனநாயகத்தன்மை கொண்ட எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவில் வெளியிடப்பெறும் ஒரு நூலில் பலருடைய மனதைப் புண்படுத்தக் கூடிய கருத்தைத் தக்க காரணங்கள் இன்றி வெளியிடுவது விரும்பத் தக்கதல்ல. கோவி மணி சேகரனவர்களையும் பிறருக்காக அவரது கருத்தை மாற்றிக் கொள்ளும்படி கேட்பதும் சரியல்ல. இந்த தர்மசங்கடமான நிலையில் ஒரு பதிப்பாளரின் பொறுப்புணர்ச்சிமிக்க கடமை என்று கருதி வருத்தத்துடன், அக்கட்டுரையை நூலில் சேர்க்காமல் விட்டு விட்டோம். -

இந்த ஆண்டிலேயே தமிழ்ச் சிறு கதைகளைப் பற்றி இரண்டு விமர்சன நூல்களும், புதிய தமிழ்க் கவிதை' பற்றி ஒரு ஆய்வு நூலும் வெளியிட்டுள்ளோம். அதைத் தொடர்ந்து தமிழ் நாவலைப் பற்றியும் ஒரு நல்ல ஆராய்ச்சி நூல் வெளியிட வேண்டுமென்ற எங்கள் ஆவல் பூர்த்தி யடையத் துணை புரிந்த தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் இந்நூலில் தம் கட்டுரைகளையும், தலைமை உரைகளையும் வெளியிட அனுமதி தந்த எழுத்தாள அன்பர்களுக்கும் எங்கள் மனப்பூர்வமான நன்றி உரித்தாகுக.

சென்னை கன. முத்தையா 1–12–66. தமிழ்ப் புத்தக்ாலயம்