பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் நாள் தலைமை உரை

கி. வா. ஜ.

தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் மிகவும் பயனுள்ள காரியங்கள் நிகழ்கின்றன என்பதற்கு இந்த நாவல் விழா ஒரு சான்று. நாவல்களைப் பற்றிய ஆராய்ச்சியை எழுத் தாளர்கள் வரவேற்பார்கள். தமிழில் விமரிசனம் இல்லை என்ற குறையை அடிக்கடி சொல்லி வருகிருேம். அந்தக் குறையைப் போக்க இத்தகைய முயற்சிகள் உதவும், விமரிசனம் அல்லது திறய்ைவு என்பது இலக்கியத்தின் குணங்களையும் குற்றங்களையும் தெரிந்து எடுத்துக் கூறுவது தான். ஆனால் அது எளிதான காரியம் அன்று. குற்றங் களையே வரிசைப்படுத்திக் கூறுவதோடு நின்ருல் அது திறளுய்வு ஆகாது; அப்படியே குணங்களை வானளாவப் புகழ்ந்தாலும் நியாயமான விமரிசனம் ஆகிவிடாது. விமரி சனம் செய்கிறவன் தன்னுடைய விருப்பு வெறுப்புக்கள் காரணமாக ஒன்றை ஆராயப் புகுந்தால் நேர்மையான விமரிசனம் வெளிவராது. . . . .

விமரிசனம் என்பதும் ஒரு கலை இலக்கியப் படைப்பு வகைகளில் அதுவும் ஒன்று. 'இதெல்லாம் மட்டம்' என்று தடிகொண்டு அடிப்பதோ, 'ஆஹா இதைப் போல