பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

வருமா?' என்று வானளாவப் புகழ்வதும் நடு நிலையில் நின்று ஆராய்வது ஆகா. விமரிசனம் மேலும் மேலும் நல்ல இலக்கியங்களைப் படைக்கத் தூண்டுகோலாக இருக்க வேண்டும். சுகாதார இன்ஸ்பெக்டரின் அறிக்கை மாதிரி இருக்கக் கூடாது. ஆராயும் படைப்பில் உள்ள நலங்களை யும் குறைகளையும் எடுத்துச் சொல்லி, இன்னவகை நலங் களும் இணைந்திருந்தால் சிறந்து நிற்கும் என்றும், இன்ன வகைக் குறைகளை மாற்றினல் நல்லது என்றும் பரிவோடு சொல்ல வேண்டும். அப்போதுதான் விமரிசனமும் இலக்கியத் தரத்தைப் பெறும். அப்படிச் சொல்வதிலும் ஒரு பண்பு வேண்டும்.

இன்று சரித்திர நாவல்களைப் பற்றிய ஆராய்ச்சியை ஐந்து அன்பர்கள் செய்யப் போகிருர்கள். மேல்நாட்டு இலக்கிய வழியைப் பின்பற்றியே இன்று புதிய இலக்கியங் களைப் படைத்து வருகிருேம். நாவல் என்பது அத்தகைய வற்றில் ஒன்று. அதன் வகைகளில் ஒன்ருகிய சரித்திர நாவல் என்பது எழுத்தாளனுடைய இருவகைத் திறமை யைக் காட்டுவதாக இருக்கும். சரித்திர நாவல் எழுதப் புகும் ஆசிரியன் நாவலில் வரும் சரித்திரப் பகுதிகளுக்கு நிலைக்களமான நூல்களே நன்கு படித்திருக்க வேண்டும். அதாவது அவன் நல்ல சரித்திர மாணவகை இருக்க வேண்டும். அதோடு நாவல் எழுதுவதற்குரிய படைப் பாற்றலும் உடையவனுக இருக்கவேண்டும். சரித்திர நாவல் என்பது சரித்திரத்தையே நாவலாக எழுதுவது அன்று. சரித்திரத்தின் கூறுபாடுகளை வைத்துப் பின்னுவது அது. குறிப்பிட்ட சரித்திர காலத்தில் அந்த நிகழ்ச்சிகள் நடந்திருக்கலாம் என்ற எண்ணத்தை உண்டாக்கவேண்டும். சரித்திரத்தில் வரும் மன்னர்களின் பெயர்களையும் வேறு பெயர்களையும் அங்கங்கே தெளித்து வைத்தால் மட்டும் சரித்திர நாவல் ஆகிவிடாது. சரித்திரத்துக்கு மாறுபட்ட நிகழ்ச்சிக்ளேர், அந்தக்காலத்துக்கு ஒவ்வாத செய்திகளோ நாவலில் வந்தால் அதுவும் முரளுனது. பழங்காலத்துச்