பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

சோழர் வரலாற்றை நிலைக்களமாகக்கொண்டு ஒரு நாவலே ஒருவர் எழுதுகிரு.ர். அதில், பகைவர் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவினன், மன்னனுக்கு ரோஜாப்பூ மாலே போட்டான் என்று வந்தால் அவை கால வழு (anachronism) ஆகும்.

சரித்திரத்தில் வரும் சூழ்நிலையை வைத்துக்கொண்டு நிகழ்ச்சிகளைக் காலவழு வராமல் அமைத்துக் குணசித்திரங் கள் நன்ருக அமையும்படி செய்து கதையில் ஒட்டம் உண்டாகும்படி சமைக்கும் ஆற்றலுடையவர் சரித்திர நாவலே எழுத வல்லவராக இருப்பார். சரித்திரத்தைக் கற்றுத் தேர்ந்த அறிவும் நாவலே எழுதும் கற்பனை ஆற்ற லும் ஒருங்கே பொருந்தியவர்கள் சரித்திர நாவல்களை எழுதும் தகுதியையுடையவர்கள்.

தமிழில் சரித்திர நாவல்களை எழுதும் துறையில் வழி காட்டியவர் அமரர் கல்கியவர்கள். பல்லவர் காலத்து வரலாற்றையும், சோழர் சரித்திரத்தையும் படித்து அறிந்து அவற்றை நிலைக்களமாகக் கொண்டு அவர் படைத்த பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் என்பவை வாசகர்களின் உள்ளத்தைக் கவர்ந்தன. சிவகாமியின் சபதத்துக்கு ஒரு வரலாற்றுப் பேராசிரியரே முன்னுரை எழுதியிருக்கிரு.ர். சரித்திரக் கூறுபாடுகள் எவ்வாறு மாறுபாடின்றி அந்த நாவலில் இணைந்து விளங்கு கின்றன என்பதை அவர் அந்த முன்னுரையில் எடுத்துக் காட்டியிருக்கிருர்,

ஒரு பத்திரிகையின் ஆசிரியராக இருந்து தொடர் கதை எழுதும் கடமையை மேற்கொண்ட கல்கிக்கு மிக நீண்ட நாவல்களை எழுத இந்த வரலாற்றுச் செய்திகள் உதவின. வரவர அளவில் பெரிய தொடர் கதைகளே எழுதினர். அவரைப் பின்பற்றி இப்போது சரித்திர நாவல்களைச் சிலர் எழுதி வருகிருர்கள். சரித்திரத்தோடு ஒப்பு நோக்கிச் சரித்திரக் கூறுபாடுகளுக்கு முரளுனவை மிகுந்து இருப்ப