பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

படிப் பார்த்தால், நானும் ஒரு கடவுள்தான்' என்று விளக்குகிருன் ஜனநாதன். இல்லை. அதெல்லாம் முடியாது. ஜனநாதா! நீ ஏதாவது ஒரு கடவுளின் பெயரால் தான் சத்தியம் செய்ய வேண்டும்' என்று வற்புறுத்துகிருர் ஏகவாசகர். 'அப்படியானல் ஜனநாதன்மீது சத்தியம் செய்கிறேன். ஜனநாதன் என்பதும் கடவுளரின் பெயர் களில் ஒன்றுதான்’ என்று ஜனநாதன் கூறும்போது ஏகவாசகரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஜனநாதனைக் கொன்றுவிடுவதாகக் கூறும் ஒருவன், 'உனக்கு வைகுந்தப் பதவி தருகிறேன்' என்கிருன். ஜனநாதன் அரசியல்வாதிகள் ஆசைப்படாத பதவி அது ஒன்றுதான்’ என்று நகைச் சுவை ததும்பக் கூறுகிருன்.

ஜனநாதன் அறிவும் ஆற்றலும் மிக்கவன். அதனல் அவனைக் கண்டு மற்றவர் பயப்பட வீரசேகரன் அவனை விரும்புகிருன்; அவனைத் தன் உற்ற நண்பனுகப் பாவிக் கிருன். ஜனநாதன் வீரசேகரனை மட்டுமே விரும்புகிருன். பிறரைத் தன் அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்குவதில்லை. வீரசேகரனுக்குக்காகத் தன் காதலி அகல்யாவைக்கூடப் பலி கொடுத்து விடுகிருன். வீரசேகரன் இறக்கும்போது, பிறந்தபோதும் அழாத கல்நெஞ்சனை ஜனநாதன் கண்ணிர் வடிக்கிருன். வீரசேகரனே ஜன நாதன் காப்பாற்றி யிருக்க முடியாதா? முடியும் என்றே தோன்றுகிறது. ஏகவாசகரின் மகன்தான் வீரசேகரன் என்ற உண்மையை மறைத்து வைத்துக் கடைசி நேரத்தில் வீரசேகரன் யானைக்காலால் இடரப்படும் நேரத்தில் வெளிப் படுத்தி, 'ஏகவாசகரே, உம் மகனைக் கொல்லும் சோழப் பேரரசை எதிர்த்து என்னுடன் சேர்ந்து வாள் உயர்த் துங்கள்’’ என்று கூறுகிருன். தம் இலட்சிய வெற்றிக்காக எதையும் செய்யும் இயல்பினன் ஜனநாதன். இல்லை யென்ருல் வீரசேகரன் யார் என்ற உண்மையை முன்னரே வெளிப்படுத்தி அவனைக் காத்திருக்கலாமல்லவா ?