பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 §

ஜனநாதன் எத்தன்மையன் என்று புரிகிறதல்லவா? அவனைக் கண்டால், அவன் பெயர் கேட்டால் பாண்டிய அதிகாரிகளுக்கும், சோழ அதிகாரிகளுக்கும் ஒரே அச்சம்; நடுக்கம். ஜனநாதன் நாவசைத்தால் யார் தலை உருளுமோ என்று பயந்து சாவார்கள். ஆம், அவன் அத்தகைய தீயவன்; அல்லது திறமைசாலி !

வீரபாண்டியனின் முதல் மகன் பராக்கிரமனை ஜன நாதன் கொல்ல விரும்புகிருன். ஆனால், அதை அவன் செய்யவில்லை. அவனைச் சற்றே அலட்சியப் படுத்திய பாண்டிநாட்டு அதிகாரி அஞ்சுக்கோட்டை நாடாள்வான் செய்யுமாறு தூண்டிவிடுகிருன். நாடாள்வான் பாண்டி யனின் மகனைக் கொன்று, மக்களின் வெறுப்பைச் சம்பாதித் துக் கொள்கிருன் ஜனநாதன் அவன் கொட்டம் அடங்கி யது என்று கை கொட்டிச் சிரிக்கிருன்.

ஜனநாதனுக்குப் பிடிக்காதவன் சோழ அதிகாரி ஆடையூர் நாடாள்வான். அவனிடம் பெரிய படை இருந் தது. அதை நெட்டுர் கோட்டை முற்றுகையில் ஜனநாதன் வஞ்சகமாகப் பலி தருகிருன். தன்னை வெறுக்கும் முத்தரை யனைத் தந்திரமாகக் கொல்கிருன். இப்படித் தான் நினைத் ததைச் சாதித்துக்கொள்ளும் சாமர்த்தியசாலி, ஜனநாதன்.

ஜனநாதன் எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பான், சிரிக்கப் பேசிச் சிந்தனையைக் கிள்ளுவான். ஒருமுறை ஜனநாதன் விசாரணைக் கூடத்தில் சாட்சி சொல்ல வரு கிருன், அவன் சொல்வதெல்லாம் உண்மை என்று கடவுள் மீது சத்தியம் செய்து கூறவேண்டும் என்று ஏகவாசகர் கூறுகிரு.ர். ஜனநாதன், என்மீதே சத்தியம் செய்கிறேன்! ஏனென்ருல் நானும் ஒரு கடவுள்தான்' என்கிருன். ஏகவாசகர் திடுக்கிட்டு, என்ன?’ என்று கேட்டதும், நான் ஒர் அத்துவைதி ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இரண்டல்ல; ஒன்றுதான் என்கிற ஆதிசங்கராச்சாரியாரின் அத்வைதக் கொள்கையை நம்புகிறவன். அந்தக் கொள்கைப்