பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

榜2

ஆட்சியில் தளர்ச்சியையும், உண்டுபண்ணி விட்டமை யோடு இறுதியில் சோழர் பேரரசு வீழ்ச்சி எய்தி மறைந் தொழியுமாறும் செய்துவிட்டன என்பது ஒருதலை’ என்று கூறுகிறது பிற்காலச் சோழர் சரித்திரம் !’

சரித்திரம் துரோகி என்று ஜனநாதனத் துாற்றுகிறது. ஏனென்ருல், அவன் தன்னை ஆதரித்த சாம்ராஜ்யத்தை அழிக்க முற்பட்டான். அதையே ஆசிரியர் தியாகமாக்கிக் காட்டுகிருர். ஜனநாதன் சோழ சாம்ராஜ்யத்தை அழிக்க முயன்றதற்கு ஒர் அற்புதமான இலட்சியத்தை காரணமாக்கு கிருர், ஜனநாதன் வாசகர்களுக்கு ஒர் இலட்சிய வீரகை, மக்கள் உரிமையைக் காக்கும் மாபெரும் தலைவனுகத் தென்படுகிருன். -

தமிழகம் முழுவதையும் வென்று அடிமைப் படுத்தும் குலோத்துங்கனின் அருகே, அவனை அழிக்கக் கருதும் ஒருவன் செல்வாக்கோடு நிற்கிருன். அப்படியானல் அவன் எப்படிப் பட்ட திறமை மிக்கவகை இருக்கவேண்டும்? ஆசிரியர் இராமநாதன் இதை நன்கு உணர்ந்து ஜனநாதனை உருவாக்கியுள்ளார். அவர் படைத்த ஜனநாதன் எப்படிப் பட்டவன் தெரியுமா? இதோ ஜனநாதனே தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிருன் கேளுங்கள் :

உறவாடிக் கெடுக்கும் உத்தம குணம் என் குளுதிசயங் களில் தலை சிறந்தது. சுயநலம், நயவஞ்சகம், நம்பிக்கைத் துரோகம், விஷமம், ஏளனம், பொருமை, பேராசைமுதலான நம் நீதி நூல்கள் கண்டிக்கும் துர்க்குணங்களெல் லாம் என்னிடம் பொதிந்திருக்கின்றன...நான் ராஜதந்தி ரத்தில் குள்ளநரி. அரசியல் கட்சிகளில் அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி. மத நம்பிக்கைகளில் கூடுவிட்டுக் கூடு பாயும் வேதாளம். பதவி மோகத்தில் வேட்டை நாய். பணப் பசியில் மலைப் பாம்பு. பழி தீர்ப்பதில் மத யானை. மத்தியஸ்தம் செய்வதில் ருத்ராசுப் பூனே. ஆல்ை, அரசி யலில் என். அந்தஸ்து நிலைத்திருப்பதற்கு இத்தனை மிருகக் குணங்களும் எனக்கு அத்தியாவசியமாய் இருக்கின்றன.