பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

கொண்டு, தன்னுடைய சொந்த நன்மைகளைத்தான் அத்தகைய அரசாங்கம் கவனித்துக் கொண்டிருக்கும்.' என்று கூறும் ஜனநாதன் அப்படிப்பட்ட நிலையடைந்த சோழ சாம்ராஜ்யத்தை அழித்துக் கிராம ராஜ்யத்தை உண்டாக்குவதே தன் இலட்சியம் என்று கூறுகிருன். மக்களின் உரிமைகளைக் காக்க மாபெரும் சாம்ராஜ்யத்தை அழித்தே தீரவேண்டும்; கிராம சுய ஆட்சி வந்தேயாக வேண்டும் ! இந்த இலட்சியத்தை நிறைவேற்றவே ஜனநாதன் ஒவ்வொரு செயலையும் செய்கிருன்.

பாண்டிமாதேவியைச் சிறைப் பிடித்தது, அவளைக் காவலில் வைத்தது, அவளைச் சோழ மன்னர் விரும்புவதாக ஒரு செய்தியைப் பரப்பியது, இறுதியில் பாண்டிமாதேவி யைச் சோழப் பேரரசின் தாதியாக வேளமேற்றியது, ஆகிய இ த் த னை செயல்களுக்கும் காரணகர்த்தா ஜனநாதனே! இச் செயல்களில்ை சோழ மன்னர்மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் என்றும், அதல்ை சோழ சாம்ராஜ்யம் அழிய வாய்ப்பு நேரும் என்றும் கூறுகிருன். அதற்கேற்ப வீரசேகரன் உட்பட பலரைச் சோழனின் பகைவர்களாக மாற்றுகிருன். ஜனங்களின் உரிமைக் காகச் சாம்ராஜ்யம் சரிந்தே தீரவேண்டும் என்னும் இலட் சியத்தை ஜனநாதன் இறுதியில் வெளிப்படுத்தும்போது தான், ஜனநாதனின் புதிர்ச் செயல்களுக்கு விளக்கம் கிடைக்கிறது. இந்த இலட்சியத்தை மெல்ல மெல்ல உருவாக்கி இறுதியில் வெளிப்படுத்தும் ஆசிரியரின் திறமை போற்றத் தக்கது. -

சோழனின் முக்கிய அதிகாரியான ஜனநாதன் சோழ னின் பகைவன்; அவன் அருகே இருந்தே அவனுக்குக் குழி பறிக்கிருன். இதைச் சரித்திரமும் கூறுகிறது. ஜனநாத னுக்குப் பிற்காலத்தில் (முதலாம்) கோப்பெருஞ்சிங்கன்' என்று பெயர். இவன் நன்றி மறந்து தன்னலங் கருதிச் செய்த அடாத செயல்களே கி. பி. 13-ஆம் நூற்ருண்டின் நடுவில் சோழ இராச்சியத்தில் அமைதியின்மையையும்,