பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இது கதை. வீரசேகரனும் ஊர்மிளாவும் ஆசிரியரின் கற்பனைப் படைப்புகள். மீதியுள்ளவர்களில் முக்கியமான பலரும் வரலாற்றில் வாழ்பவர்கள். அஞ்சுக்கோட்டை நாடாள்வான், ஆடையூர் நாடாள்வான். சம்புவராயன், ஏகவாசகன் வாணகோவரையன் முதலியோர் வரலாற்றுப் பாத்திரங்களே. இப் பெரிய நாவலில் கதாநாயகனையும் பின்னே தள்ளி எதிலும் முன்னிற்பவன், வாசகர்களே எளிதில் கவர்ந்து அவர்தம் இதயத்தில் இடம் பிடிப்பவன் ஜனநாதன்.

ஜனநாதன்தான் கதையை நடத்துகிருன் ஜனநாதன் தான் கதையில் திருப்பங்களை உண்டாக்குகிருன், ஜனநாதன் தான் எங்கும் நிறைந்திருக்கிருன். ஜனநாதன் ஒரு வர லாற்றுப் பாத்திரம். சோழனின் முக்கிய அதிகாரிகளில் ஒருவன் இவன் என வரலாறு குறிப்பிடுகிறது. இவனுடைய முழுப் பெயர், கூடல் ஏழிசை மோகன், மணவாளப் பெருமாள், வாள் நிலை கண்ட பெருமாளாகிய இராசராசக் காடவராயன் ஜனநாதன். இவன்தான் இச் சரித்திர நாவலின் இலட்சியத்தை உருவாக்கிக் காட்டுகிருன். எந் நாடும் அளவுக்கு மீறிய சக்தி பெறக்கூடாது. சாம் ராஜ்யம் சர்வ சக்தி வாய்ந்ததாகப் பெருகப் பெருக, அதன் விஸ்தீரணம் அதிகரிக்க அதிகரிக்க, ஆட்சியாளரிடம் சர்வாதிகாரம் குவியக் குவிய, ஜனங்களின் உரிமையும், வாழ்வும், செல்வாக்கும் பறிபோய்விடும். சர்வ வல்லமை பொருந்திய சாம்ராஜ்யம் என்பது யதேச்சாதிகாரப் பாதையிலே ராஜ நடை போட்டு, தன்னுடைய ஆட்சி நீடிப்பதையும், அதிகாரங்களையும், ஆடம்பரங்களையும், அபிலாஷைகளையும், மூர்க்கத்தனமான லட்சியங்களையும், முரட்டுத்தனமாக நிலை நாட்டுவதிலேயே தன் கருத்தை யெல்லாம் செலுத்திக் கொண்டிருக்குமே தவிர, மக்களின் உரிமைகளையோ, நன்மைகளையோ சிறிதும் பொருட் படுத்தாது! மக்களுக்கு நன்மை செய்வதாகச் சொல்லிக் கொண்டே மறைமுகமாக மக்களை மிதித்து, நசுக்கிக்