பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனி, வீரபாண்டியன் மனைவி'யின் கதைச் சுருக்கத் தைக் காண்போம்.

மூன்ரும் குலோத்துங்கன் பாண்டியனை வெல்லத் தன் படையை அனுப்புகிருன். பாண்டியனின் படைத் தலைவருள் ஒருவனை அஞ்சுக்கோட்டை நாடாள்வானின் வஞ்சகத் தாலும், சோழ வீரன் வீரசேகரனின் தீரத்தாலும் பாண்டியன் தோற்று, அவன் மனைவியுடனும் ஒரு மகனுட னும் ஒடுகிருன். மற்ருெரு மகன் சோழரின் ஒற்றர் படைத் தலைவன் ஜனநாதனின் சூழ்ச்சியால் கொல்லப் படுகிருன்.

வீரபாண்டியன் நெட்டுரில் தங்கிச் சோழன வெல்லப் படை திரட்டுகிருன். வீரசேகரன் அங்கும் பாண்டியனே வெல்கிருன்; அவன் முடியைக் கைப்பற்றுகிருன் சேரனின் மகளான பாண்டியனின் இளம் மனைவியைச் சிறைப் பிடித்துச் சென்று மதுரையில் காவலில் வைக்கிருன்.

குலோத்துங்கன் வீரபாண்டியன் மனைவியை அடைய விரும்புகிருன் என்று ஜனநாதன் கூற, வீரசேகரன் காவலைப் பலப்படுத்துகிருன். வீரபாண்டியனும் அவனேச் சார்ந் தோரும் பாண்டிமா தேவியை விடுவிக்கப் பலமுறை முயன்று தோல்வி காண்கின்றனர். இறுதியில் ஜனநாதன் பாண்டியனைச் சோழனிடம் செல்லுமாறும், அதன் மூலம் அமைதியான இன்ப வாழ்வு பெறுமாறும் கூறுகிருன். சர்வாதிகாரம் நிறைந்த சோழ சாம்ராஜ்யத்தை அழிக்கும் பணியில் தான் ஈடுபட்டுள்ளதாகவும், வருங்காலத்தில் பாண்டியனின் மகனைச் சோழனின் பகைவளுக்கி, அவனுடன் சேர்ந்து சோழ சாம்ராஜ்யத்தை அழித்து விடலாம் என்றும் கூறிப் பாண்டியனைச் சோழனிடம் அனுப்பி வைக்கிருன், இடையே வீரசேகரன் பகைவனை வீரபாண்டியனின் கூட்டத்தைச் சார்ந்த ஊர்மிளா என்னும் பெண்ணைக் காதலிப்பதும் அவளுக்காகப் பல உதவிகளைச் செய்து, முடிவில் அவளுடன் சாவிலே இணைவதும் சுவையாகக் கூறப்படுகிறது. . . - -