பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

尖母

பாண்டியர் வரலாற்றைப் படிப்பவர்கள் சடைய வர்மன் வீரபாண்டியன் பன்னிரண்டாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் பாண்டிநாட்டை ஆண்டதை அறியலாம். அவன் ஆட்சியில் நடந்த மூன்று நிகழ்ச்சிகளை அடிப்படை யாகக் கொண்டு எழுப்பப்பட்ட எழில் மாளிகையே

வீர பாண்டியன் மனைவி.

1. கி. பி. 1180ல் மூன்ரும் குலோத்துங்கன், வீர பாண்டியன்மீது படையெடுத்துச் சென்று, அவன் நாட்டை வென்று குலசேகர பாண்டியனின் மகன் விக்கிரமபாண்டிய னுக்கு அளித்தான். இப் போரில் வீரபாண்டியனின் புதல்வரில் ஒருவன் இறந்தான். -

2. சோழனை எதிர்க்க நினைக்கும் வீரபாண்டியனைச் சோழப் படை நெட்டுரில் சந்தித்துச் சமர் புரிந்தது. இப் போரிலும் பாண்டியன் தோற்ருன். சோழன் பாண்டிய னின் முடியைக் கைப்பற்றினன். மேலும் வீர பாண்டி யனின் பட்டத்தரசியைச் சிறைப்பிடித்து வேளம் ஏற்றின்ை. (அந்தப்புரத்துத் தாதியாக்கினன்).

3. சோழனை வெல்ல முடியாத வீரபாண்டியன் சேர நாடடைய, அவனுக்கு உதவி செய்தால் சோழனின் பகை யைத் தேடிக்கொள்ள நேரும் என்றஞ்சி வீரபாண்டிய னுடனும் அவன் மக்கள் வீரகேரளன், பருதிகுலபதி ஆகி யோருடனும் சோழனை அடைகிருன் சேரன். சோழன் பாண்டியனுக்கு அவன் நாட்டில் ஒரு பகுதியும் முடியும் அளித்து அவன் மக்களுக்குத் தன் பக்கம் இருக்கும் சிறப் பளித்தான். х r

இந்த மூன்று வரலாற்று நிகழ்ச்சிகளைக் கொண்டு, மூன்று பாகங்களும், நூற்றிருபத்தாறு அத்தியாயங்களும், ஆயிரத்தி நானுாற்றுப் பதினறு பக்கங்களும் கொண்ட சுவையான சரித்திர நாவலைச் சமைத்த ஆசிரியரின் திறன் போற்றத் தக்கது. -