பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரு. இராமநாதனின் வீர பாண்டியன் மனைவி

'பூவண்ணன்'

வரலாறு என்பது மந்திர வித்தையன்று. ஆனல் அதைக் காணும் கண் பெற்ருர் வரலாற்றில் நிறைந்த மந்திர வித்தை இருப்பதைக் காணலாம்' என்று குறிப்பிட்டார் நேரு, அத்தகைய கண், வரலாற்றைப் படிக்கும் அத்தனை பேருக்கும் இருப்பதில்லை. அந்த அற்புதக் கண்ணே ஆற்றல் மிக்க எழுத்தாளர்கள் பெற்றிருக்கின்றனர். எனவே, அவர் கள் வெறும் நிகழ்ச்சிகளிடையே, வெறும் குறிப்புகளிடையே சுவையான கதைகளைக் கண்டு களிக்கின்றனர். தாம் அறிந்த வற்றை எழுத்தில் வடித்துப் பிறரையும் களிப்புறச் செய்கின்றனர்.

ஆற்றில் மிதந்துவந்த கூந்தலிழையை வைத்து, தான் அதற்கு முன் காணுத பெண்ணின் உருவத்தை உள்ளவாறு அமைத்து விட்ட ஓவியனைப் பழங் கதைகளில் பார்த்திருக் கிருேம். அந்த ஒவியனின் உள்ளம் பெற்றவர்கள் எழுத் தாளர்கள். எனவே கூந்தலிழையைப் போன்ற ஒன்றிரண்டு வரலாற்று நிகழ்ச்சிகளையும் குறிப்புகளையும் கொண்டு அற்புத மான சரித்திர நாவலை உருவாக்கி விடுகின்றனர். அத்தகை யோரில் ஒருவரே அரு. இராமநாதன் அவர்கள்.