பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葛6

வீட்டை அழகு படுத்த வீட்டின்முன் செடிகள் நடலாம். செடிகளுக்குப் பதில் ஓர் ஆலமரத்தை நட்டால், அது ஓங்கி உயர்ந்து செழித்து வளர்ந்து அந்த வீட்டையே மறைத்துக் கொண்டு நிற்கும். ஜனநாதன் பாத்திரம் அந்த ஆல மரத்தை ஒத்தது. கதையின் பிற பாத்திரங்களை மறைத்து இது ஒன்றே எல்லா இடத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டு நிற்கிறது. அதனல் பிற பாத்திரங்கள் தங்கள் முக்யத்து வத்தை இழந்துவிடுகின்றன.

இளம் மனைவியிடம் உயிரை வைத்து, காத லுக்கும் கடமைக்கும் இடையே சிக்கி இன்னலுறும் வீரபாண்டியன், அவனைக் காக்க முனைந்து நிற்கும் காத்தவ ராயன், அவன் காரியங்களுக்குக் கைகொடுக்கும் சக்தியும் சாகசமும் நிறைந்த ஊர்மிளா, துரோகமும் சூதும் தொட முடியாத வீரசேகரன், அவன்மீது வெறி கொண்டலையும் சிவகாமி, ஆகிய அத்தனே பேரையும் ஆசிரியர் அற்புத மாகப் படைத்துள்ளார். ஆனல் ஜனநாதன் அவர்களை விழுங்கி ஏப்பமிட்டுத் தான் மட்டுமே தன்னிகரறற்றவகிைத் தளுக்கி நிற்கிருன். வீரபாண்டியன் மனைவி யைப் படிப்போரின் உள்ளம் சாணக்கியனையும் மிஞ்சும் ராஜ தந்திரியான ஜனநாதன என்றும் மறக்காது.

வீரபாண்டியன் மனைவி யின் சிறப்பு ஜனநாதன் என்னும் பாத்திரப் படைப்பு மட்டுமன்று. ஆசிரியரின் தமிழ் நடை எவரையும் கவரவல்லது. சோர்ந்து தளரும் உள்ளத்தையும் இழுத்துப் பிடித்து நிமிர்ந்து நிற்கச் செய்யும் வேகமும் விறுவிறுப்பும் நிறைந்த நடை. ஆயிரத்து நானூற்றுக்கு மேற்பட்ட பக்கங்களே அலுக்காமல் படிக்கச் செய்வது இந்த நடைதான். -

ஆசிரியர் கம்பராமாயணத்தில் நல்ல தேர்ச்சி பெற்ற வர் என்பதை நாவலைச் சற்றே புரட்டிப் பார்ப்பவரும், அறியலாம். ராமாயணக் கதைக்கு ஒப்பிட்டு வீரபாண் டியன் மனைவி எழுதப்பட்டுள்ளது. கதையின் பாத்திரங்