உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தமிழ் நூல்களில் பௌத்தம்

என்று கேட்டேன். "அப்படி யொன்றுமிராதே" என்று அவர் பதிலிறுத்தார். உடனே "ஞானசூரிய"னைத் திறந்து அவ்விடத்தைக் குறித்துக் காட்டினேன். "இஃது அச்சுப் பிழையாயிருத்தல் வேண்டும். இந்நூல் மலையாளத்திலும் எழுதப்பட்டிருக்கிறது" என்று தமது கவளியைப் பிரித்து அந்நூலை எடுத்துத் "திறங்களை" என்று அவர் படித்துக் காட்டினார். எனக்கு மலையாள எழுத்துத் தெரியாது. "அங்ஙன மாயின் சுவாமிகள் பிழை திருத்தஞ் செய்து பத்திரிகைகட்கு அனுப்புவது அறம்" என்று கூறினேன். பின்னை [1]அப்பிழை திருத்தம் பத்திரிகைகள் வாயிலாக வெளி-


  1. அன்புடைய சகோதரர்கட்கு இக்கடிதம் வழியாய் அறிவிப் வது யாதெனில், "ஞானசூரியன்" என்ற புத்தகத்தில் பக்கம் 96-ல் சமணர்களை ஜயிக்கத் திருஞானசம்பந்த சுவாமிகள் ஆலவாய்ப் பதிகத்தில், அந்தணாளர் புரியுமருமறை யென்கிற பாட்டில், "சிந்தை செய்யா வருகர் திறங்களை" என்ற சொற்றொடர், "சிந்தை செய்யா வருகர் சிரங்களை" என்று மாறியிருக்கிறது. அச்சுப் பிழையாக உள்ளதை "ஞானசூரியனை" வாசிக்கும் ஜனங்கள் 'சிரங்களை' என்று இருத்தலைத் 'திறங்களை' என்று திருத்தி வாசிக்கக் கேட்டுக்கொள்ளுகிறேன். நான் எழுதின " அப்ராஹ்மணோதயோ தனம் ' என்ற மலையாள புத்தகத்தில் திறங்களை யென்றே எழுதியிருக்கிறேன். மேற்படி "ஞானசூரியன்" புத்தகத்தில் 80 பக்கம் அச்சிடும் வரைக்கும் என் கண்பார்வையில் நடந்தது. மிகுதி அச்சியற்றத் திரு. வயி. சு. ஷண்முகம் செட்டியார் அவர்களிடம் ஒப்பு வித்தேன். ஆனால் இப்புத்தகத்தில் நிகழ்ந்த பிழை அச்சுப்பிழையாயிருத்தல் வேண்டும், அல்லது என் புத்தகத்தைக் காப்பி செய்தவர்களின் பிழையாயிருத்தல் வேண்டும். அதுவன்றி இப்புத்தகத்தில் பல அச்சுப் பிழைகள் வடமொழிப் பாட்டுகளிலும் தமிழ் நடைகளிலும் இருப்பதால், இனி, திருத்தி வெளியிட்டால் லோகோப காரமாயிருக்குமென்று நம்புகிறேன். (ஓம்) சுவாமி சிவானந்த சாஸ்வதி.