பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தமிழ் நூல் அறிமுகம்

இவற்றை யன்றிக் கவியின் இலக்கணம், நூல்களின் இலக்கணம், இலக்கியங்களின் வகை, உவமைகளின் வகை, குணங்களைக் காட்டும் பாவங்களாகிய மெய்ப்பாடு களின் இலக்கணம், எந்தப் பொருளை எந்த எந்தச் சொல் லால் சொல்ல வேண்டும் என்ற மரபு ஆகியவற்றைப் பற்றிய கருத்துக்களையும் பொருளதிகாரத்தில் காண லாம். இலக்கிய வகைகளைப் பற்றிச் சொல்லும் பகுதியில் அடி வரையறை இல்லாதவை இவை என்று ஒரு பிரிவு வருகிறது. அதில்தான் உரைநடையைப் பற்றிய இலக்கணம் வருகிறது. முதலில் சொன்ன நால் வகை உரைநடைகளைப் பற்றிய செய்திகள் அங்கேதான். இருக்கின்றன. -

பொருளதிகாரத்தில் உள்ள சில கருத்துக்கள்:

பெண்களோடு கடலைக் கடந்து செல்லக் கூடாது.

. காதலன் தன் காதலியோடு வாழும்போது அவள் உணவு பரிமாறுகிறாள். வேப்பங் காயைப் போலக் கசப் பாக உணவு இருந்தாலும், 'நீ கை தொட்டது. வானோர் - அமுதத்துக்கு ஒப்பானது" என்று பாராட்டுகிறான்.

அப்பர் என்பது ஆட்டுக்குப் பெயர். புறத்தில் வயிரம் உடைய மரங்களுக்குப் புல் என்று பெயர், அகத்தில் வயிரம் உடையவை மரமெனப் பெயர்பெறும். நிலம், தீ, நீர் வளி, விசும்பு ஆகிய ஐந்தும் கலந்த கலப்பு:உலகம்.

- 1610 . குத்திரங்களை உடையது. தொல்காப்பியம். அது தமிழ்ப் புலவர்களுக்கு ஆணை நூலாக வழங்குகிறது.

தொல்காப்பியன் தன் ஆணையின் தமிழ் நூல் அறிந் தோர்க்குக் கடனே' என்று ஒரு புலவர் சொல்கிறார்.