பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தொல்காப்பியம் à

அன்பு உண்டாகும். யாரும் அறியாமல் அவர்கள் மனம் ஒன்றிக் காதல் செய்வார்கள். இந்தக் காதலுக்குக் களவுக் காதல் என்று பெயர். பிறகு அவர்கள் மணந்து கொண்டு இல்லற வாழ்வை மேற்கொள்வார்கள். அதைக் கற்பொழுக்கம் என்று சொல்வார்கள். இந்த இரண் டையும் பற்றிய இலக்கணங்களைப் பொருள் அதிகா ரத்தில் காணலாம். காதலனைத் தலைவனென்றும், காதலி யைத் தலைவி யென்றும் வழங்குவது மரபு. காதலிக்கு ஓர் உயிர்த் தோழி இருப்பாள். காதலியைப் பெற்ற தாயை நற்றாய் என்றும், வளர்த்த தாயைச் செவிலி என்றும் சொல்வார்கள். காதலனுக்கும் தோழன் உண்டு. அவனுக்குப் பாங்கன் என்று பெயர். காதல் வரலாறாகிய நாடகத்தில் வரும் இத்தகைய பாத்திரங்களின் இயல்பு களை யெல்லாம் விரிவாகத் தொல்காப்பியம் சொல் கிறது.

புறப்பொருளைப் பற்றிச் சொல்லும்,பகுதியில் போர் பற்றிய பலவேறு நிலைகளைக் காணலாம். "சண்டைக்கு எடு பிடி மாடு பிடி' என்பது ஒரு பழமொழி. போர் நிகழ்வதற்கு முன்பு, பகைவர் நாட்டில் உள்ள மாடுகளை பிடித்துக்கொண்டு வருவார்கள். இதை வெட்சித்திணை என்பார்கள். பாரதத்தில் விராட பர்வத்தில் வரும் கதை போல் இருக்கிறதல்லவா? மாட்டைப் பகைவர் பிடித்துப் போகும்போது அவற்றை மீட்டு வருவதும், பின்பு போர் மூளுவதும், மதிலை முற்றுகையிட்டுச் சண்டையிடுவதும் போன்ற பலவேறு உத்திகளும் நிலை களும் இந்தப் பகுதியில் விரிக்க்ப்பெறுகின்றன. காத லுக்கும் வீரத்துக்கும் எவ்வளவு சிறப்பை அளித்தனர் தமிழர் என்பதை அகப்பொருள் புறப்பொருள் இலக் கணங்கள் காட்டுகின்றன. - -

த-1