பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தமிழ் நூல் அறிமுகம்

சொல்லதிகாரத்தில் பெயர், வினை, இடை, உரிஎன்று உள்ள நால்வகைச் சொற்களைப் பற்றிய இலக்கணம் வருகிறது. மனிதர்களில் ஆண் பால் என்றும். பெண் பால் என்றும் வேறுபாடு தெரிகிறது. இரண்டு பாலும் அல்லாத அலி ஒருவர் இருக்கிறார். அவரை எந்தப் பாவில் சொல் கிறது? இது ஒரு சிக்கல். ஆணும் அல்லாமல் பெண்ணும் அல்லாமல் இருந்தாலும் அந்தப்பேர்வழி ஒன்று ஆணோடு சேர்ந்திருப்பார்; அல்லது பெண்களோடு சேர்ந்திருப்பார், அலி யென்று தனியாக இருப்பது வழக்கம் அன்று. எந்தப் பாலோடு சேர்கிறாரோ அந்தப் பாலைச் சொல்வி விடு என்று தொல்காப்பியம் வாழ்க்கையை ஒட்டி வழி வகுக்கிறது. கடவுள் ஆண் பாலா, பெண் பாலா, ஒன்றன் பாலா? அவர் எல்லாம் கடந்தவர். எப்படிச் சொல்வது? எப்படிச் சொன்னாலும் ஏற்பார். எப்படி வழக்கமோ அப்படியே சொல்லலாம்; தவறு இல்லை. இப்படிப் பல செய்திகள் சொல்லதிகாரத்தில் வருகின்றன.

மூன்றாவது பகுதியாகிய பொருளதிகாரந்தான் பெரியது. பொருள் இலக்கணம் தமிழுக்கே சிறப்பாக அமைந்தது என்று சொல்வார்கள். பொருளை அகப் பொருள் என்றும், புறப்பொருள் என்றும் பிரிப்பார்கள், காதலைப் பற்றிச் சொல்வது அகப்பொருள். பெரும் பாலும் வீரத்தைப் பற்றிச் சொல்வது புறப்பொருள். அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்லும் உறுதிப் பொருள்கள் நான்கில் இன்பத்தைப் பற்றிச் சொல்வது. அகம் என்றும் மற்ற மூன்றையும் பற்றிச் சொல்வது

புறம் என்றும் ஒரு வகையில் கூறுவது வழக்கம். . . . . . .

ஒருவனும் ஒருத்தியும் சந்திக்கும் போது; முன் பிறவி களில் அமைந்த தொடர்பினால் அவர்கள் உள்ளத்தே