பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தொல்காப்பியம் 3

பெயர் காரணமாகத் தொல்காப்பியம் என்ற பெயரை அது பெற்றது. மிகப் பழங்காலத்தில் அது தோன்றி னாலும் இன்றும் புலவர்கள் படிக்கும் நூலாகவும், இலக்கண அமைதியைத் தெரிந்து கொள்வதற்கு ஏற்ற ஆதார நூலாகவும் அது விளங்குகிறது.

எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பெரும் பகுதிகளை உடையது அது. ஒவ்வொரு பகுதியையும் அதிகாரம் என்ற பெயரால் வழங்குவர். எழுத்ததிகாரம் முதலிய மூன்று அதிகாரங்களிலும் தனித்தனியே ஒன்பது ஒன்பது பிரிவுகள் உள்ளன. அவற்றை இயல்கள் என்று சொல்வார்கள்.

எழுத்ததிகாரத்தில் தனியெழுத்துக்களின் பெயர் தன்மை, பிறப்பு முதலியவற்றைக் காணலாம். எழுத்தும் எழுத்தும் சேர்வதைப் புணர்ச்சி என்று சொல்வது இலக்கண பரிபாஷை. அவ்வாறு சேரும்போது உண்டா கும் மாற்றங்களை மூன்று இயல்கள் சொல்கின்றன. விழா-ஆட்டம்-விழாவாட்டம்; மரம்+ஒடிந்தது= மரமொடிந்தது; இலை+தடுக்கு=இலைத்தடுக்கு; கால்க் தடுக்கிற்று = க்ாறடுக்கிற்று. இப்ப்டி யெல்லாம் ஏன் மாற வேண்டும்? இவற்றுக்குரிய விதிகளை இந்தப் பகுதிகளில் காணலாம். எந்த எழுத்துக்கும் பின்னால் எந்த எழுத்தும் வரலாம் என்று பொதுவாக நமக்குத் தோன்றும், க் என்ற எழுத்துக்குப் பின் ழ வருமா? வராது. க் என்ற எழுத்தும் க என்ற எழுத்தும் தக்க என்பதில் சேர்ந்து வருகின்றன. அப்படியே சகரம் தச்சன் என்பதில் வருகிறது. ழகரம் அப்படி வருமோ? பழ்ழம் என்பது போலச் சொல் உண்டா? இல்லை. இதைப் பற்றி யோசிக் கிறபோதுதான் உண்மை தெரிகிறது. இவற்றையெல்லாம் எழுத்ததிகாரத்தில் காணலாம்.