பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

宠 தமிழ் நூல் அறிமுகம்

பாட்டுக்களுக்கு இடையில் உரைநடை வரும். அது ஒரு வகை. பாட்டே இல்லாமல் கருத்தைத் தொடர்ந்து உரை நடையில் தெரிவிப்பது ஒரு வகை. புனைந்துரையாக அமைந்த கதை ஒரு வகை. உள்ளதைப் பரிகசித்து எழுதியது ஒரு வகை. இப்படி நான்கு வகையில் உரை நடை பயன்பட்டது; உரைநடை நூல்கள் இருந்தன.'

இப்படிச் சொன்னால், எந்த நூற்றாண்டில்?’ என்று கேள்வி உடனே எழும். "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே தமிழில் இப்படி உரைநடை நூல்கள் நான்கு வகையாக இருந்தன என்றால் நம்பாதவர்களே பெரும் பான்மையாக இருப்பார்கள்; நம்புபவர்கள் மூக்கின் மேல் கை வைப்பார்கள். -

உரைநடையைப் பற்றிய இந்தக் கருத்து உண்மை யானது; கற்பனை அன்று. ஆதாரம் வேண்டுமா? தொல் காப்பியம் என்ற இலக்கண்‘நூலை எடுத்துப் பாருங்கள்.

தொல்காப்பியனார் என்ற பெரும் புலவர் இயற்றியது தொல்காப்பியம் என்ற இலக்கணம். அதுதான் இப்போது கிடைக்கும். தமிழ் நூல்களில் மிக மிகப் பழமை யானது. அதன் காலத்தைப் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் நிலவு கின்றன. சங்க காலத்து நூல்கள் இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முந்தியவை. அவற்றுக்கும் முந்தியது தொல் காப்பியம்; இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டு முதல் மூவாயிரம் ஆண்டுவரை முந்தியது என்று சொல்லலாம்.

தொல்காப்பியர் அகத்தியருடைய மாணாக்கர் என்று ஒரு வரலாறு உண்டு. அகத்தியர் மூன்று தமிழுக்கும் ஒர் இலக்கணம் இயற்றினார். அதற்கு அகத்தியம் என்று பெயர். அவருடைய மாணாக்கராகிய தொல்காப்பியர் இயல் தமிழுக்கு இலக்கணம் இயற்றினார். ஆசிரியர்