பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

з - தமிழ் நூல் அறிமுகம்

பாண்டிய மன்னன் அமைத்தான். அதைக் கடைச் சங்கம் என்பார்கள். கல் வெட்டுக்களில் பாண்டிய மன்னரின் புகழைச் சொல்லும் மெய்க்கீர்த்திகளில்; மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்று வருகிறது. அப்பர் சுவாமிகள் தேவாரத்தில், "நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி' என்ற அடி வருகிறது. பிற்காலத்து நூல்களிலும் சங்கத்தைப் பற்றிய செய்திகள் உண்டு.

ஆனால் சங்க காலத்தில் எழுத்த நூல்களில் அதைப் பற்றிய பேச்சே இல்லை. பல புலவர்கள் ஒன்று கூடி ஆராய்ந்து இன்புற்றார்கள் என்ற செய்திவருகிறதேயன்றி அவர்கள் ஒரு சங்கத்தில் இருந்தார்கள் என்று தெளிவாக எந்தப் பழைய நூலும் சொல்லவில்லை. "தொல்லாணை நல்லாசிரியர், புணர் கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் மதுரை' என்பது பத்துப் பாட்டு. என்றாலும், இறையனார் அகப்பொருளுரையினால் மூன்று. சங்கங் களிலும் உண்டான நூல்களைப் பற்றிய செய்திகள்தெரிய வருகின்றன. தொல்காப்பியம் இடைச் சங்க காலத் திலேயே இலக்கணமாக இருந்தது என்று அந்த உரை இசால்கிறது. -

கடைச் சங்க காலத்தில் தோன்றிய நூல்களில் இப்போது கிடைப்பவை முப்பத்தன்று நூல்கள். இவற். றையே இப்போது சங்க நூல்கள் என்று வழங்குகிறோம்.

பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க் கணக்கு என்று மூன்று கொத்தாக இந்த முப்பத்தாறு நூல்களையும் பிரித்திருக்கிறார்கள் பத்துப் பாட்டு. என்பது பத்து நெடிய பாட்டுக்களை உடைய தொகுதி. திருமுருகாற்றுப்படை பொருந ராற்றுப்படை. சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல் வாடை,