பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சங்க நூல்கள் 9

குறிஞ்சிப்பாட்டு,பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்ற பத்தும் அத்தொகுதியில் அடங்கியுள்ளன.

வறுமையால் வாடிய புலவனையோ, பாணனையோ, பொருநனையோ, விறலியையோ, கூத்தனையோ வள்ளல் ஒருவனிடம் சென்று பொருள் பெற்று நலம் எய்திய புலவனோ, பொருநனோ,பாணனோ, "நீயும் அவனிடம் போனால் உன் வறுமை தீர்ந்து இன்புறலாம்' என்று சொல்லும் முறையில் அமைந்தது ஆற்றுப்படை என்னும் நூல். பழங்காலத்தில் ஒரு வள்ளலுடைய பெருமையையும் அவனது ஊரின் வளப்பத்தையும் அதற்குப் போகும் வழியையும் தெரிவிப்பதற்கு ஏற்ற வகையில் புலவர்கள் ஆற்றுப் படைகளை மிகுதியாகப் பாடியிருக்க வேண்டும். தொல்காப்பியத்தில் ஆற்றுப்

படைக்குரிய இலக்கணம் இருக்கிறது. -

பத்துப் பாட்டில் படிக்குப் பாதி, அதாவது ஐந்து நூல்கள், ஆற்றுப்படைகள். முருகாற்றுப்படை புலவனை ஆற்றுப் படுத்தியது. பொருநராற்றுப்படை பொரு நனையும், சிறு பாணாற்றுப்படை, பெரும் பாணாற்றுப் படை இரண்டும் பானர்களையும் ஆற்றுப்படுத்தியவை. மலைபடுகடாம் என்பது கூத்தரைப் பார்த்து ஆற்றுப் படுத்தியது; அதற்குக் கூத்தராற்றுப்படை என்ற பெயரும்

தனித்தனியே செய்யுட்கள் பலவற்றின் தொகுதியாக அமைந்த எட்டு நூல்கள் எட்டுத்தொகை என்னும் கொத்தில் அடங்கியுள்ளன. தமிழில் காதலைப் பற்றிச் சொல்வது அகப்பொருள். பெரும்பாலும், வீரம், கொடை முதலியவற்றைப் பற்றிச் சொல்வது புறப்பொருள். அகப்பொருளைப் பற்றிச் சொல்லும் நூல்களாகிய நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை,