பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சங்க நூல்கள் 11.

பதினெண் கீழ்க்கணக்கில் பல நீதி நூல்கள் அடங்கி யிருக்கின்றன. உலகப் புகழ் வாய்ந்த திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்ததே.

நாலடியார், நான்மணிக்கடிகை, கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திணைமாலை நூற்றைம்பது, தினை மொழி ஐம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்தினை எழுபது, திருக்குறள், திரி கடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறு பஞ்ச மூலம். முதுமொழிக் காஞ்சி, ஏலாதி, கைந்நிலை என்பவை பதினெண் கீழ்க்கணக்காகிய நூல்கள்

இவற்றில் நாலடியார், நான்மணிக் கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது. திருக்குறள், திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம், முது மொழிக் காஞ்சி, ஏலாதி என்னும் பதினொன்றும் நீதி நூல்கள். . . -

கார் நாற்பது, திணை மாலை நூற்றைம்பது, திணை மொழி ஐம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, கைந்நிலை என்னும் ஆறும் அகப் பொருள் நூல்கள். -

களவழி நாற்பது புறப்பொருள் அமைதியை உடைய நூல். . - - ஒவ்வொரு பாட்டிலும் மூன்று நீதிகளைச் சொல்வது திரிகடுகம்; நான்கு நீதிகளைச் சொல்வது நான்மணிக் கடிகை; ஐந்தைச் சொல்வது சிறு பஞ்ச மூலம்; ஆறைச் சொல்வது ஏலாதி. - •. -

இந்த மூன்று கொத்துக்களையும் ஒன்றாகச் சேர்த்து, "மூத்தோர்கள், . . . . . . . . . . . . . வாடி அருள்பத்துப் பாட்டும்எட் டுத்தொகையும் கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்' என்று தமிழ் விடுதூது சொல்கிறது.