பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திருமுருகாற்றுப்படை

முருகன் அடியார்கள் ஆறு படைவீடுகளைத் தரிசித்து மகிழ்வது இந்தக் காலத்தில் வழக்கமாக இருக்கிறது. முருகனுக் குரியவை ஆறு படைவீடுகள் என்ற கணக்குப் பல காலமாக இருந்து வருகிறது. இந்த மரபை முதல் முதலில் உண்டாக்கியவர் நக்கீரர். பத்துப் பாட்டில் முதல் பாட்டாக உள்ள திருமுருகாற்றுப் படையில் ஆறு படைவீடுகளைச் சொல்கிறார் அந்தப் புலவர்,

ஒரு குகையில் மற்றவர்களோடு ஒரு பூதம் நக்கீர ரைச் சிறையில் அடைத்து வைக்க, அப்போது அவர் திருமுருகாற்றுப்படையைப் பாட, முருகன் எழுந்தருளி அந்தப் பூதத்தைக் கொன்று எல்லாரையும் விடுவித்தான் என்பது புராண வரலாறு. r +

முருகப் பெருமானைத் தரிசித்து அவனுடைய அருளைப் பெறவேண்டும் என்ற ஆர்வமுடைய புலவன் ஒருவனுக்கு மற்றொரு புலவன், அந்தப் பெருமான் இன்ன இன்ன இடங்களில் எழுந்தருளி யிருக்கின்றான். அந்த இடங்களில் சென்று அவனைத் தரிசித்து அருள் பெறலாம்' என்று சொல்லும் முறையில் 317 அடிகளால் அமைந்தது. இந்த நூல். .

இது, முதலில் முருகப் பெருமானது சோதி வடிவத் தைச் சொல்லி, அவனது திருவடியையும் திருக்கரத்