பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திருமுருகாற்றுப்படை , 13

தையும் காட்டி, தெய்வயானையையும் குறிப்பிட்டு, முருகன் மார்பில் அணியும் கடம்ப மாலையையும் தலையில் அணியும் காந்தள் கண்ணியையும் சிறப்பித்து, வேலால் சூரனைச் சங்காரம் செய்த அவனது வீரச் செயலை எடுத்துக் கூறுகிறது. அத்தகைய செவ்வேலை .யுடைய முருகப் பெருமானுடைய சேவடியை அடையும் நல்ல உள்ளத்தோடு நீ புறப்படுகிறாய். உன்னுடைய விருப்டம் கை கூடும்' என்று முருகனைக் காண விரும்பும் புலவனுக்கு நம்பிக்கை ஊட்டி, முருகன் இன்ன இன்ன இடங்களில் இருக்கிறான்' என்று சொல்லத் தொடங்கி முதலில் திருப்பரங்குன்றத்தைப் பற்றிக் கூறுகிறார் நக்கீரர். - -

மதுரையின் பெருமையைச் சுருக்கமாகக் கூறி அதற்கு மேற்கே இருப்பது திருப்பரங்குன்றம் என்று வழி காட்டு கிறார் . அந்தக் குன்றத்தின் இயற்கை யெழிலைச் சில வரிகளிலே சொல்லி விடுகிறார். இது திருமுருகாற்றுப் படை யின் முதற் பகுதி.

காந்தள் கண்ணியைச் சொல்லும் இடத்தில் காந்தள் வளரும் மலைச் சோலையை வருணிக்கிறார். தேவலோகத்து மங்கையர் ஆடையும் அணியும் சிற்ப் பாகப் பெற்றிருந்தாலும் தம்மை மேலும் அழகு செய்து கொள்வதற்குக் குறிஞ்சி நிலத்திலுள்ள மலைக்கு வந்து, அங்குள்ள பல வண்ண மலர்களால் கோலஞ் செய்து கொணடு, மகிழ்ச்சியோடு முருகனை வாழ்த்தி ஆடுகிறார் கள். அவர்கள் ஆடும் மலைச்சோலையிலுள்ள காந்தள்ை முருகன் தன் தலையில் அடையாளப் பூவாகச் சூட்டி யிருக்கிறான். -

இவ்வாறு அழகிய ஆரணங்கினர் ஆடும் இனிய ஆடலை வருணித்தவர் அடுத்துப் பேய் மகள் ஆடலைக் காட்டுகிறார். முருகன் சூரனைச் சங்கரித்த போர்க்