பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தமிழ் நூல் அறிமுகம்

களத்தில் பேய் மகள் பிணத்தை உண்டு உவகை பொங்க ஆடுகிறாள். தேவ மகளிர் ஆடலும் பேய்மகள் ஆடலும் ஒன்றுக்கொன்று மாறுபட்டு நின்று சுவை ஊட்டுகின்றன.

திருப்பரங்குன்றத்தைச் சார்ந்த வண்டினங்கள்

கூட நல்ல இன்பத்தைப் பெறுகின்றன. கரிய சேறுள்ள பரந்த வயலில் தேங்கியுள்ள நீரில் தாமரை விரிந்து

வாயவிழ்ந்து விளங்குகிறது. அதில் வந்து தேனையுண்ட வண்டுகள், மாலை வரவும் அங்கேயே துயில்கின்றன. மேலுள்ள இதழ்கள் குவிகின்றன. கீழே முள்ளையுடைய

தண்டு அவை துயிலும் மலர் மாளிகைக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. விடிந்தவுடன் மலர் விரிகிறது. வண்டுகள்

அருகிலே நெய்தலில் உள்ள வெறியூட்டும் கள்ளை உண்டு உரம் பெற்று, மேலே பறக்கின்றன. இனிப்பகலில்

அவற்றிற்கு உணவு அங்கே காத்திருக்கிறது. குன்றின்மேல்

உள்ள சுனைகளில் கண்ணைப் போல மலர்ந்துள்ள சிறிய, பூக்களில் தேன் இருக்கிறது. அந்தத் தேனை அவை உண்டு. iங்காரம் செய்கின்றன. - -

இப்படி வண்டுகளின் இன்ப வாழ்வைக் காட்டுகிறார் நக்கீரர் வண்டுகளே இத்தகைய இன்பத்தைப் பெறும் போது மக்கள் இன்னும் மிகுதியான இன்பத்தைப் பெறுபவர்களாகவே இருக்கவேண்டும் என்ற குறிப்பு.

நமக்குத் தோன்றுகிறது. . . "

அடுத்த பகுதி திருச்செந்தூராகிய திருச்சீரலை. வாயைப் பற்றிச் சொல்கிறது.

முருகன் யானையின்மேல் எழுந்தருளி வருகிறான். அவனுடைய ஆறு முகங்களும் வெவ்வேறு செயல்களைப் புரிகின்றன. அவற்றிற்கு ஏற்ற காரியங்களை அவனுடைய 'திருக்கரங்கள் செய்கின்றன. இப்படி ஆறு முகங்களும்.