பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. திருமுருகாற்றுப்படை 15.

பன்னிரண்டு கரங்களும் கொண்டு அன்பர்களுக்கு அநுக்கிரகம் செய்யும் பொருட்டுத் திருச்சீரலைவாய்க்கு. வந்து தங்கியிருக்கிறான் முருகன். - .

திருவாவினன் குடியில் தன் தேவியோடு அவன் எழுந்தருளியிருக்கிறான். அகங்காரத்தால் தவறு செய்த நான் முகனை அவன் சிறையில் அடைத்து விட்டான்! படைப்புத் தொழில் நடக்கவில்லை யாதலால், எல்லாத் தொழில்களும் நின்று விட்டன. நான்முகனைச் சிறையி னின்றும் விடுதலை செய்தருள வேண்டுமென்று விண்ணப் பித்துக் கொள்வதற்காகத் தேவ லோகத்திலிருந்து சிவபிரான் முதலியவர்கள் திருவாவினன்குடிக்கு வருகிறார்கள்; முருகனுடைய அன்பர்களாகிய முனிவர் களை முன்னிட்டுக் கொண்டு வருகிறார்கள். முனிவர் களுக்குப் பின் ஆடல் பாடல் வல்ல தெய்வ மகளிர் வருகிறார்கள். அவர்களுக்குப் பின் திருமால், சிவ பெருமான், இந்திரன் ஆகியோர் வருகிறார்கள். அவர் களைப் பின்பற்றி முப்பத்து மூன்று தேவர்கள், பதினெண் கணங்கள் யாவரும் வருகிறார்கள். அவர்கள் தம் குறையைத் தீர்த்துக் கொள்வதற்கு வந்து வணங்கும் நிலையில் முருகன் திருவாவினன் குடியில் எழுந்தருளி யிருக்கிறான்.

அடுத்தது திருவேரகம். இப்போது சுவாமிமலை என்று வழங்கும் தலம் அது. அங்கே நாற்பத்தெட்டு ஆண்டுகள் பிரமசாரியாக இருந்து விரதம் பூண்ட அந்தணர்கள் ஈர ஆடையை உடுத்தபடியே சடட்சர மந்திரத்தை உச்சரித்து முருகனை வழிபடுகிறார்கள்.

ஐந்தாவது படை வீடு பல குன்றகளும் அமைந்த தொகுதி. முருகன் குன்று தோறும் அருளாடல் புரிகிறான். குன்றுதோறாடல் என்ற அந்தப் பகுதியில்