பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தமிழ் நூல் அறிமுகம்

வேலனாகிய பூசாரி வழிபட, முருகன் எழுந்தருளும் காட்சியை வருணிக்கிறார் நக்கீரர் குறிஞ்சி நில மக்கள் விழா எடுக்க, முருகன் மயிலைப் போன்ற எழிலை யுடைய மகளிருடன் வருகிறான். சிவந்த மேனியும் சிவந்த ஆடையும் அசோகந்தளிர், தொங்கும் திருச் செவியும் உடையவன்ாக வருகிறான். இடையிலே கச்சையும் காவிலே கழலையும் மார்பிலே வெட்சி மாலை யையும் அணிந்திருக்கிறான். ஒரு கால் புல்லாங்குழலை வாசிக்கிறான்; ஒரு சமயம் கொம்பை ஊதுகிறான்; வெவ் வேறு சமயங்களில் வெவ்வேறு வகை வாத்தியங்களை வாசிக்கிறான். - - - - -

ஆட்டின் மேல் வருகிறான்; சில சமயங்களில் மயில் மேல் வருகிறான். சேவற்கொடியை ஏந்தியிருக்கிறான்.

இவ்வாறு குன்று தோறும் அவன் நின்றருளுகிறான்.

ஆறாவது பகுதி பழமுதிர்சோலையைச் சொல்வது. இப்போது அழகர் மலை என்று வழங்கும் இடம் அது. மேலே சொன்ன ஐந்து இடங்களிலும் முருகன் எழுந் தருளியிருக்கிறான் என்று சொன்ன ஆசிரியர் பழமுதிர் சோலையிலும் இருக்கிறான் என்று சொல்லி முடிக்கும் முன்பு அவன் வெளிப்பட்டும் மறைந்தும் உறையும் பல இடங்களை எடுத்துச் சொல்கிறார். -

ஒவ்வோர் ஊரிலும் கொண்டாடும் விழாவில் அவன் இருப்பான். அன்பர்கள் துதி செய்யும் இடத் தில் ஒளிர்வான். பூசாரி பூசை பண்ணும் இடத்தில் விளங்குவான். காட்டிலே இருப்பான். சோலையிலே இருப்பான் ஆற்றுக்கு நடுமேட்டில் இருப்பான். ஆற்றிலும் இருப்பான். குளத்திலும் இருப்பான். தெருக் கள் கூடும் சந்திகளிலும் கடம்ப மரத்திலும் மரத்தடியில் மக்கள் கூடும் மன்றத்திலும் பலர் கூடும் அவையிலும்