பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திருமுருகாற்றுப்படை 17"

கம்பத்தை நட்டு வழிபடும் இடத்திலும் குறமகள் வழி படும் இடத்திலும் இருப்பான். -

'இப்படி நான் கூறிய இடங்களில் எங்கேயாவது நீ மனமுருகி அவனைப் போற்றி அவன் திருநாமங்: களைக் கூறித் துதித்தால் அவன் எழுந்தருளி வந்து உனக்கு அருள் புரிவான்' என்கிறார் நக்கீரர்.

இந்த இடத்தில், அருச்சனையைப் போல் முருக னுடைய திருநாமங்களை அடுக்கிச்சொல்கிறார். சரவண பவனே, கார்த்திகேயனே, சிவகுமாரா, உமை மைந்தனே, பகைவருக்குக் காலனே, காளியின் குழவியே,பராசக்தியின் மைந்தா, தேவ சேனாபதி, மாலை மார்ப, நூலறி புலவ, செருவில் ஒருவ, பெரு வீரனே, அந்தணருக்குச் செல்வ மாக இருப்பவனே, ஞானிகளின் துதியைப் பெறு பவனே, மங்கையர் கணவ, மைந்தர் ஏறே, வேலாயுதா, குறிஞ்சிக் கிழவ, புலவர் ஏறே, பெரும்பெயர் முருக, விரும்புவதை அளிப்பவனே, அநாத ரட்சகா, பரிசில. ருக்கு வழங்குபவனே, பெரும்பெயர்க் கடவுளே, குர சங்காரா, போர் மிகு பெருந. குரிசில் என்று பொருள் கொள்ளும் திருப்பெயர்கள் அங்கே உள்ளன.

தன்னை அண்டி வந்த புலவனுக்கு அருள் செய்ய முருகன் தோன்றுகிறான். தன் விசுவரூபத்தை அடக்கிக் கொண்டு முருகுத் திருவுருவத்தோடு காட்சியளிக்கிறான்.

அணங்குசால் உயர்நிலை த.இப் பண்டைத்தன்

மணங்கமழ் தெய்வத்து இளநலம் காட்டி' , '

என்று சொல்லும் இடத்தில் முருகன் என்ற திருநாமத் துக்குரிய நான்கு சிறப்பான பொருள்களைச் குறிப்பிடு கிறார். முருகை உடையவன் முருகன். முருகு என்ப தற்குப் பல பொருள்கள் இருப்பினும் மணம், தெய்வத்