பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பொருநர் ஆற்றுப்படை 21

முன் பின் யாழைப் பார்த்து அறியாதவன் அவன். 'அதற்குள் எதையாவது வைத்திருக்கிறாயோ?" என்று மறுபடியும் கேட்கிறான். யாழின் கு ட் த் து க்கு ள் எதையாவது வைத்திருக்கக் கூடும் என்பது அவன் எண்ணம்.

  • இதுவா? இது யாழ். இதன் குடம் இது. இதற்குள் ஒன்றும் இல்லை."
  • யாழ் என்றால்?" : "இசை எழுப்பப் பயன்படுத்துவது." "அப்படி என்றால்?" 'இந்த நரம்புகளை 6೬4. இசை பாடலாம்." "எங்கே, செய்து காட்டு பார்க்கலாம்."

விறலி யாழைச் சுருதி கூட்டிப் பாடத் தொடங்கு கிறாள். அந்த வெறிச்சோடிய பாலை நிலத்தில் இன்னிசை அலை பாய்கிறது. பாலைப் பண்ணை அவள் வாசிக்கிறாள். அதற்காகவே அமைந்த பாலை யாழ் அது. அதை மீட்டி விறலியும் பாடுகிறாள். அங்கே ஒரு வகை யான தண்மை பரவுகிறது. கள்வர்கள் இது வரையில் அப்படி ஓர் இசையைக் கேட்டதில்லை. அவர்கள் அப்படி அப்படியே சிலை போல நிற்கிறார்கள். வாயைத் திறந்தபடி அதில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் கையில் உள்ள ஆயுதங்கள் தாமே தழுவுகின்றன. அவை மட்டுமா? அவர்கள் உள்ளத்திலுள்ள கொடுமையும் நழுவுகிறது. தம்மை மறந்து கேட்கிறார்கள். -

பாட்டு நிற்கிறது. கள்வர்கள் பிரமித்து நிற்கிறார் கள். அவர்கள் உள்ளம் குழைந்து தம் கையில் உள்ள பொருள்களை அவர்களுக்குக் கொடுத்து அனுப்புகிறார். கள். அந்த அற்புதமான பாலை யாழ், ஆறலை கள்வரின்

து-2 . .