பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தமிழ் நூல் அறிமுகம்

படைகளை நழுவச் செய்வதோடன்றி, அவர்கள்

உள்ளத்தே இருந்த அருளுக்கு மாறாகிய வண்கண்மையை யும் நழுவச் செய்கிறது.

இதை மிகச் சுருக்கமாக இரண்டே வரிகளில் சொல்லி விடுகிறார், முடத்தாமக் கண்ணியார் என்னும் புலவர்,

ஆறலை கள்வர் படைவிட அருளின் மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை,'

|வழிப்பறிக்காரர்கள் தம் கையில் உள்ள படைக்கலன்

களை நழுவவிடவும், அவர்கள் உள்ளத்தில் அருளுக்கு

எதிராக உள்ள கொடுமையை மாற்றவும் ஆற்றலுள்ள, கேட்பதற்கு இனிய பாலை யாழ்.)

கரிகாற் பெருவளத்தானாகிய சோழ மன்னனைப் பாராட்டி முடத்தாமக் கண்ணியார் பாடிய பொருநர் ஆற்றுப் படையில் இந்த அடிகள் வருகின்றன. பொருநர் என்பவர் தடாரிப் பறை என்ற வாத்தியத்தை வாசிப்ப வர்கள். ஒரு கையால் அடித்து வாசிக்கும் வாத்தியம் அது. சோழ மன்னனிடம் பொருள் பெற்ற பொருநன் ஒருவன், எதிர்வந்த பொருநனைப் பார்த்து, "நீயும் அவனிடம் போனால் நலம் பெறலாம்' என்று பாடியது பொருநர் ஆற்றுப்படை. பத்துப் பாட்டில் கோக்கப் பெற்ற நூல்களில் இரண்டாவது இது.

கரிகாலனிடம் பரிசு பெற்று வரும் பொருநன், நடு வழியில் விறலியோடு வரும் பொருநனைப் பார்த்து, அழகிய பாலையாழை வாசிக்கும் எழிலுடைய விறலி பாடும் பாட்டுக்கு ஏற்பத் தடாரியை வாசித்துக் கடவுளை வணங்கி இருக்கும் பொருநனே, நீ புரவலரைக் காணுவ தற்குப் பல இடங்களுக்குச் சென்று திரியாமல் உன்னை நான் இங்கே எதிர்ப்பட்டது புண்ணியப் பயன்தான்'

என்று தொடங்குகிறான். - - . . . . .