பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பொருதர் ஆற்றுப்படை 23

"நானும் உன்னைப் போலத்தான் இருந்தேன். கரி காலன் இருக்கும் இடத்தை அடைந்து விடியற்காலையில் என் கையில் உள்ள தடாரியை வாசித்தேன். மிக விரைவில் சோழ மன்னன் வந்து என்னை மிகவும் அன்போடு நோக்கி, இருக்கச் செய்து என் இடையில் இருந்த கந்தைத் துணியை நீக்கிப் பாம்பின் சட்டையைப் போன்ற மெல்லிய ஆடையைத் தந்து உடுக்கச் செய்தான், இனிய பானங்களை வழங்கினான். மகளிர் பொன் கலத்தில் அந்தப் பானங்களைத் தரத் தர உண்டு மகிழ்ந்தேன்.

"அவனுடைய அரண்மனையில் ஓரிடத்தில் தங்கி னேன். இளைஞர்கள் அவன் இருக்கும் அவைக்களத்துக்கு அழைத்துச் சென்றார்கள். பல வகையான உணவுகளை அவன் அளித்தான். இரவும் பகலும் தெரியாமல் விருந் துண்டேன். - .

"ஒருநாள், எங்கள் ஊருக்குப் போக வேண்டும் என்று சொன்னபோது சிறிதே கோபித்தவனைப் போலப் பார்த்து, எங்களை விட்டுப் போகப் போகிறீர்களா?” என்று சொல்லி யானைகளைப் பரிசிலாகக் கொடுத்தான். என் வறுமை ஒழிந்தது.'

இவ்வாறு சொன்ன பொருநன் கரிகாலனது பெருமையை விளக்குகிறான். அந்த மன்னன் தாய் வயிற்றில் இருந்த போதே அவன் தந்தை இறந்தான், பிறந்த உடனே அரசுரிமையைப் பெற்றான், கரிகாலன். சின்னஞ்சிறு போதிலே சேரனையும் சோழனையும் வெண்ணி யென்னும் இடத்திலே போரிட்டு வென்றான்.

"நீங்களும் அவனிடம் போனால் நல்ல ஆடைகளைத் தருவான்; பானங்களையும் உணவுகளையும் தருவான்: பொன்னாலான தாமரையை உங்களுக்குச் குட்டுவான்;