பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - தமிழ் நூல் அறிமுகம்

விறலிக்கு நல்ல அணிகலன்களைத் தருவான்; நாலு குதிரை பூட்டிய தேரை வழங்குவான். அவன் உங்களை எளிதில் விடை கொடுத்து அனுப்பமாட்டான்” என். கிறான் வந்த பொருநன்.

கடைசியில் சோழநாட்டின் வளத்தையும் காவிரியின் வளத்தையும் எடுத்துச் சொல்லி, 'அந்தக் காவிரியால் வளம் பெற்ற சோழ நாட்டுக்குத் தலைவனாகிய கரிகாலன் உங்களுக்குப் பரிசில் தருவான்' என்று கூறி முடிக்கிறான். 248 அடிகளில் இந்த ஆற்றுப்படை நடக்கிறது. ,

யாழின் வருணனை மிக அழகாக அமைந்திருக்கிறது. கல்யாணப் பருவமுள்ள மங்கைக்கு அலங்காரம் பண்ணி வைத்தது போல உள்ளது யாழ், அதில் தெய்வம் வாழ்கிறது' என்கிறார் புலவர். பொருநனுடைய பழைய கந்தையில் ஈரும்பேனும் வாழ்கின்றன. அதுவேர்வையில் நனைந்திருக்கிறது. அதை வேறு நூலிழையால் தைத்து உடுத்துக் கொண்டிருக்கிறான். -

ஈரும் பேனும் இருந்து இறை கூடி வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த துன்னற் சிதாஅர்.' . (இறை கூடி-தங்கி, வேர்-வேர்வை. துன்னல்தைத்தல், சிதாஅர்-கந்தை 1

பொருநன் பானமும் உணவும் நுகர்ந்து நுகர்ந்து இன்புறுகிறான். அதற்குச் சீவன் முக்தர் நிலையை, உவமை கூறுகிறான். 'தவம் செய்கின்ற ஞானிகள் தம் உடம்பைப் போட்டு மரணம் அடையாமலே தவத்தின் பயன்ாகிய மோட்சத்தை அடைந்தது போல என்கிறான்.

'தவம்செய்மாக்கள் தம்உடம்பு இடாது அதன்ப்யம் எய்திய அளவை மான."