பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ப்ொருநர் ஆற்றுப்படை - 25

எல்லாவற்றையும் உண்டு உண்டு பற்கள் தினைக் கொல்லையை உழுது தேய்ந்த கொழுப் போல ஆகி விட்டனவாம். காவிரியின் வளத்தைச் சொல்லும் போது, வேலிக்கு ஆயிரம் கலம் விளையும் என்று சொல்

கிறான். - -

யாழின் வருணனை, விறலியின் வருணனை,கரிகாலன் செய்யும் உபசார வகை, பொருநனுடைய முன்னை நிலை யும் பின்னை நிலையும், கரிகாலன் கருவிலே திருவுடைய வனான வரலாறு, சோழ நாட்டில் உள்ள நாலு நிலங் களின் சிறப்பு, காவிரியின் சிறப்பு முதலியவற்றை அழகிய சொல்லோவியங்களாகக் காட்டுகிறார் புலவர்.