பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சிறுபாணாற்றுப்படை

இப்பொழுது திண்டிவனம் என்று வழங்கும் ஊர் முன்பு பெரிய நகரமாக இருந்தது. அதற்கு அப்போது கிடங்கில் என்று பெயர். இப்போதும் திண்டிவனத் துக்கு அருகில் கிடங்கால் என்ற ஊர் இருக்கிறது. அதை யும் இப்போது உள்ள திண்டிவனத்தையும் உள்ளிட்ட பெரிய நகரமாகக் கிடங்கில் இருந்தது. இன்றும் அங்கே இடிந்த மதில், அகழி முதலியன இருக்கின்றன.

இந்த நகரம் உள்ள நாட்டுக்கு அந்தக் காலத்தில் அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், ஒய்மான் நாடு என்று பெயர். ஒய்மான் என்னும் பெயரை உடைய குலத்து மன்னர்கள் இருந்து ஆட்சி புரிந்தமை யால் அந்தப் பெயரைப் பெற்றது. -

  • அங்கே ஆண்டிருந்த மன்னர்களில் ஒருவன் நல்லியக் கோடன் என்பவன். அவன் புலவர்களையும் பாணர்களை யும் கூத்தர்களையும் பாதுகாத்து அவர்களுக்கு ஏற்

வகையில் பரிசுகளை வழங்குபவன். ‘t,

அவனுடைய அன்புக்கு உரியவர்ாக விளங்கின புல வர்களில் ஒருவர் நத்தத்தனார். சென்னையை அடுத்த இடைக்கழி நாட்டில் உள்ள நல்லூர் என்ற ஊரைச் சார்ந்தவர் அவர். அவர் நல்லியக் கோடனைப் பாராட்டிப் பாடியது சிறுபாணாற்றுப்படை என்னும்