பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சிறுபாணற்றுப்படை 2?

நூல், 269 அடிகளையுடைய இந்த நூல் பத்துப்பாட்டில் மூன்றாவது நூலாகக் கோக்கப் பெற்றிருக்கிறது. நல்லி யக்கோடனிடம் பரிசு பெற்ற பாணன் ஒருவன் வறுமை யால் நலிவுற்ற மற்றொரு பாணனைப் பார்த்து, "நீயும் நல்லியக் கோடனிடம் சென்றால் பரிசு பெற்று வரலாம் என்று சொல்வதாக அமைந்தது இது.

பாணர்களில் சிறு பாணர் பெரும் பாணர் என்று இரு வகையினர். சிறிய யாழை வாசிப்பவன் சிறு பாணன்; பேர் யாழை வாசிப்பவன் பெரும் பாணன். சிறு பாணன் ஒருவனை நோக்கி அவனை ஆற்றுப் படுத்தியதாதலால் இதற்குச் சிறு பாணாற்றுப்படை என்ற பெயர் வந்தது. - o

அந்தப் பாணனைப் பற்றிச் சொல்லும்போது,

இன்குரல் சீறியாழ் இடவாயின் தlஇ" என்று. வருவதனால் இதனைத் தெரிந்துகொள்ளலாம்.

அழகிய விறலியர்களுடன் பாணர்கள் வள்ளல்களைத் தேடிக் கொண்டு வருகிறார்கள். பாணனுடைய மனைவிக்கு விறலி என்ற பெயர். அவள் அபிநயம் பிடித்து ஆடுகிறவள். அப்போது பலவகையான பாவங் களை அவள் காட்டுவாள். விறல் என்பது பாவத்துக்குப் பெயர். அதனால் விறலி என்ற பெயர் வந்தது.

அவர்கள் வறியவர்கள்; தம் கலையைச் சுவைத்து மகிழ்ந்து பரிசில் தரும் செல்வர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடிச் செல்லும் இயல்புடையவர்கள். அவர்களை நல்லியக்கோடனிடம் பரிசு பெற்று வரும் பாணன் பாலை நிலத்தில் சந்திக்கிறான். - - . . .

காட்டாறு ஓடிய இடம் அது. இப்போது எல்லாம் வறண்டு போய் மணலாக இருக்கிறது. முற்பகல் நேரம்.