பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தமிழ் நூல் அறிமுகம்

ஏறு வெயில். இந்த வெயில் தாங்காமல் அங்குள்ள கடம்ப மரம் ஒன்றின் நிழலில் அமர்ந்திருக்கிறார்கள் அவர்கள். -

விறலியர் அழகானவர்கள். அங்கே நடந்து வந்த வருத்தம் தாங்கவில்லை. அவர்கள் காலை இளைஞர்கள் மெல்ல வருடுகிறார்கள். -

அந்தக் கூட்டத்தின் தலைவனாகிய பாணனைப் பார்த்துச் சொல்கிறான் எதிர்வந்த பாணன்.

'பழங் காலத்தில், புலவர்களையும் கலைஞர்களையும் பாதுகாக்கும் பண்புடைய சேரன், பாண்டியன், சோழன் என்னும் மூன்று முடிமன்னர்கள் இருந்தார்கள். இப்போது அவர்கள் இல்லை. பேகன், பாரி. காரி, ஆய், அதிகமான், நள்ளி, ஒரி என்னும் வள்ளல்கள் ஏழு பேர் இருந்தார்கள். அவர்களும் இல்லை. அவர்களுடைய ஈகைப் பண்பை இப்போது தான் ஒருவனே ஏற்றுக் கொண்டு விளங்குகிறவன் நல்லியக் கோடன்' என்று

சொல்லத் தொடங்குகிறான். -

சேரனைப் பற்றிச் சொல்லும்போது வஞ்சி மாநகரத் தின் சிறப்பு வருகிறது. மேல் கடற்கரையைப் பற்றிய வருணனையை அங்கே காணலாம். 'மீன்கள் துண்டாகப் போகும்படி எருமை நடக்கிறது. அங்குள்ள கழுநீர்ப் பூவை மேய்கிறது. பிறகு மிளகுக் கொடி படர்ந்திருக்கும் பலா மரத்தின் நிழலில் சென்று படுக்கிறது. அருகில் உள்ள மஞ்சள் செடியின் இலை அதன் முதுகைத் தடவு கிறது. அது படுத்திருக்கும் இடத்தில் மலை மல்லிகை உதிர்ந்து கிடக்கிறது. அந்த மலர்ப் படுக்கையில் படுத்தபடியே அசை போடுகிறது. அதன் வாயில் கழு நீர்ப் பூவிலிருந்து வந்த தேன் மணக்கிறது' என்று