பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சிறுபாணாற்றுப்படை 29

வருணிக்கிறான் பாணன். இவ்வாறு அமைந்த மேலைப் புலமாகிய மலைநாட்டுத் தலைவன் சேரனுடைய வஞ்சி மாநகரம், இப்போது கொடுக்கும் மன்னன் இன்றி வறி தாக இருக்கிறது' என்கிறான்.

அடுத்தபடி, "மதுரையும் வறிதாகிவிட்டது; அங்கே பாண்டியன் இல்லை' என்று சொல்கிறான். பாண்டிய னுடைய கடற்கரைப் பட்டினமாகிய கொற்கையின் வருணனை அங்கே வருகிறது.

"உப்பு வியாபாரிகள் வண்டியில் உப்பு மூட்டை களைப் போட்டுக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் வளர்த்த மந்தி அவர்களோடு வருகிறது. அங்கே கிடக்கும் கிளிஞ்சில்களில் முத்தை இட்டு அந்த மந்தி உப்பு வியாபாரிகளின் குழந்தைகளோடு கிலுகிலுப்பை விளையாடுகிறது' என்கிறான். மதுரையை, 'தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின்...மதுரை' என்று சிறப்பிக் கிறான். - -

சோழனுடைய உறையூரைப் பாராட்டும்போது சுற்றியுள்ள இயற்கையெழிலை விரித்துரைக்கிறான்.

தமிழ்நாட்டில் ஏழு பெருவள்ளல்கள் இருந்தார்கள். அவர்களுடைய பெருமைகளைச் சங்க நூல்களில் காண லாம். அந்த ஏழு பேர்களையும் ஒருங்கே சொல்லும் பாடல்கள் இரண்டு இப்போது கிடைக்கின்றன. நிகண்டு. களில் வரிசையாகப் பெயர்களைச் சொன்னாலும் அவர் களுடைய சிறப்பைச் சேர்த்து ஒருங்கே சொல்பவை சிறு பாணாற்றுப் படையும், புறநானூற்றில் உள்ள 158-ஆம் பாடலுமே. - - - - -

அந்த ஏழு வள்ளல்களும் பூண்டிருந்த ஈகையாகிய பொறுப்பை நல்லியக்கோடன் ஒருவனே தாங்கு கிறானாம். - - -