பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தமிழ் நூல் அறிமுகம்

"எழுவர் பூண்ட ஈகைச் செந்துகம்

விரிகடல் வேலி லியலகம் விளங்க ஒருதான் தாங்கிய ஓவியர் பெருமகன்."

(ஏழு வள்ளல்கள் மேற்கொண்டகொடையாகியசிறந்த பொறுப்பை, விரிந்த கடலை எல்லையாக உடைய பரந்த உலகத்தில் விளங்கும்படியாகத் தான் ஒருவனே தாங்கிய ஒலியர் குலத்துத் தலைவன்)

நல்லியக் கோடன் பிறந்த குலம் ஒலியர் குலம். அவன் மாவிலங்கை என்ற ஊருக்குத் தலைவன். அவனிடம் சென்று அவனையும் அவன் தந்தையையும் சிறப்பித்துப் பாடினானாம், எதிர்வந்த பாணன். எங்கள் பசித் துன்பம் போக, அவன் தந்த யானையோடும் தேரோடும் வருகிறோம்' என்கிறான். அவன் அங்கே போவதற்கு முன் இருந்த நிலை என்ன? 'எங்கள் வீட்டில் அடுப்புப் புகைந்துபல நாள் ஆயின. அங்கே நாய் குட்டி போட்டிருக்கிறது. குட்டிகள் பால் குடிக்க முயல்கின்றன. தாய் நாயின் உடம்பில் என்ன இருக்கிறது? அது பாவம்,

குட்டிகள் வாய் வைப்பதனால் வலி உண்டாகவே, குரைக் கிறது. வீட்டின் மேலிருந்த கழிகளெல்லாம் கட்ட விழ்ந்து விழுகின்றன. சுவரெல்லாம் கறையான். கீழே. புழுதி; அதனிடையே காளான் முளைத்திருக்கிறது. பசியினால் வருந்திய என் மனைவி குப்பையில் முளைத்த வேளைக் கீரையைக் கொண்டு வந்து உப்பில்லாமல் வேக வைக்கிறாள். உப்புக்குக் கூட வழியில்லை. அதை எல்லோ ரும் சேர்ந்து உண்ணுகிறார்கள். வறிய நிலையைக் கண்டு. இரங்காமல் பரிகாசம் செய்யும் முட்டாள்கள் பார்க்கப் போகிறார்களே என்று கதவைச் சாத்திக்கொண்டு அதை உண்கிறார்கள். s

நீங்களும் அங்கே போங்கள், அவனுடைய நாட்டில் எயிற்பட்டினம் என்ற ஊர் இருக்கிறது. கட ற்கரையாகிய